241

கெய்தாது தானதுபோ னல்லோ ரியாவர்க்கும்
வெய்தாவ தாகாது வேறு.

இது இயையும் இயைபிலியும் வந்தமையால், விரவியற் பிற பொருள் வைப்பு.

'ஆர வடமு மதிசீத சந்தனமு
மீர நிலவு மெரிவிரியும்--பாரிற்
றுதிவகையான் மேம்பட்ட துப்புரவுந் தத்தம்
விதிவகையால் வேறு படும்.'

இது பொருந்தாவியற்கை சொல்லுதலால், கூடாவியற்கைப்பிற பொருள் வைப்பு .

"பொய்யுரையா நண்பா புகுந்த நெறிநோக்கிக்
கைவளைசோர்ந் தாவி கரைந்துகுவார்--மெய்வெதுப்புப்
பூத்தமையிற் காந்தர் பொலங்கிரியை நீத்தகன்றாற்
றீத்தகையார்க் கஃதே செயல்'.

இது கூடுவானைக் கூடுவதாக மொழிந்தமையால், கூடுமியற்கைப் பிற பொருள் வைப்பு.

'தலையிழந்தா னெவ்வுயிருந் தந்தான் பிதாவைக்
கொலைபுரிந்தான் குற்றங்க டீர்ந்தா--னுலகிற்
றனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேற் றப்பாம்
வினையும் விபரீத மாம்'.

இது விபரீதப்பட வந்தமையால், விபரீதப் பிற பொருள் வைப்பாயிற்று.

'கோவலர்வாய் வேய்ங்குழலே யன்றிக் குரைகடலுங்
கூவித் தமியோரைக் கொல்லுமாற்--பாவாய்
பெரியோரும் பேணாது செய்வரோ தம்மிற்
சிறியார் பிறர்க்கியற்றுந் தீங்கு.'

இது கூடாததனையுங் கூடுவதனையுங் கூடச்சொன்னமையால், இருமை இயற்கைப் பிற பொருள் வைப்பு.

161, 162. தடைமொழியணியின் வகை

ஆசி யனாதரங் காரணங் காரிய மையமேதுப்
பேசு முபாயஞ் சிலேடை முயற்சி பிறபொருள்வைப்(பு)
ஏசில் கருணைநட் போடு கரும மிகழ்ச்சிவன்சொல்
தேசி னிரக்கந் தலைமை யனுசயஞ் செற்றமென்னே.