243

இது சாகைக்குக் காரணங்கூறி அதன் காரியமாய் உள்ள சாகையை விலக்கியமையால், காரியத் தடைமொழியாயிற்று.

'மின்னோ பொழிலின் விளையாடு மிவ்வுருவம்
பொன்னோவென் னுஞ்சுணங்கிற் பூங்கொடியோ--வென்னோ
திசையுலவுங் கண்ணுந் திரண்முலையுந் தோளின்
மிசையிருளுந் தாங்குவதோ மின்.'

இது ஐயுற்றதனை விலக்குதலால், ஐயத் தடைமொழி.

'எம்மி திதுவென் றிரப்பவரிற் கொள்ளுதலாற்
செம்மைமலி வள்ளலென்று செப்பத் தகாய்நீயே.'

இது ஏதுத் தடைமொழி.

'காலனெனைக் காணா தொழியும் வகையருளி
ஞாலத் தகலுதியேல் யானதற் காற்றுவனே.'

இது உபாயத் தடைமொழி.

'மன்னுதனுச் சோதி மகரமீ னஞ்செவ்வாய்
பன்னுமிவற் றோடொன்றிப் பார்திகழ்ந்த--நின்னுடைய
வூனமிலா வாண்முகமா மொண்மதியொன் றுண்டாகி
லேனைமதி தன்னாலிங் கென்.

இது சந்திரனோடொக்கச் சிலேடை செய்து அதனை மறுத்தலால், சிலேடைத் தடைமொழி.

'ஏகென்று சொல்ல முயலுவ தேகலென்
றாகுமென் வாய்சொல் வது,'

இது முயற்சித் தடைமொழி.

'நூலெலாங் கற்றவனே யானாலு நோக்கறா
வாலியநின் காதலே மாவியப்புச்--சாலவு
மாராது மால்கடலுக் காறெலா மெந்நாளுந்
தீராது பாய்ந்தாலுஞ் சென்று.'

இது பிற பொருள் வைப்புத் தடைமொழி.

'இரியன் மகளி ரிலஞெமலி யீன்ற
வரிவிரவு செங்காற் குழவி--யருகிருந்தங்
கூமன்பா ராட்ட வுறங்குமே செம்பியன்ற
னாமம்பா ராட்டாதார் நாடு.'

இது கருணைத் தடைமொழி.