244

'ஏகுக வேகுதியே லேரா வுரைபிறக்குங்
காலத்தின் முன்னே கடிது.'

இஃது உறுதி சொன்னமையால், நட்புத்தடைமொழி.

கருமத்தடைமொழியாவது, ஒரு பொருளின் பக்கத்துள்ள கருமத்தைத் தடையாக்குதல். கருமமாவது ஆதேயம்; கருமியாவது ஆதாரம்.

'குடைநின் றதுசெம்மை கோலொடு சென்றது கோமனுவி
னடைநின் றதுகலி ஞாலங் கடந்தது நன்மையன்றி
யிடைநின்ற தொன்றுண் டியாதெனி னிராசகண் டீரவநின்
றொடைநின்ற தார்புனை வார்மட வார்படுந் துன்புறவே.'

இவ்விடத்துக் கருமியாயினானரசன்; கருமமாயினது தீமை. அதனைத் தடுத்தமையால், கருமத் தடைமொழியாயிற்று.

'ஆசை பெரிதுடையே மாருயிர்மே லப்பொருண்மே
லாசை சிறிது மடைகிலமாற்--றேசு
வழுவா நெறியின் வரும்பொருண்மேல் வள்ளா
லெழுவா யொழிவா யினி.'

இது ஏதுவை இகழ்ந்து விலக்கினமையால், இகழ்ச்சித் தடைமொழியாயிற்று.'

'மெய்யே பொருண்மேற் பிரிதியேல் வேறொரு
தையலார் நாட்டந் தகுநினக்கு--நெய்யிலைவேல்
வள்ளல் பிரிவற்றம் பார்த்தெங்கள் வாணாளைக்
கொள்ள வுழலுமாங் கூற்று.'

இது வலிதாகச் சொன்னமையால் வன்சொல் தடைமொழி.

'ஊச றொழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும்
வாசஞ் சுனையிழக்கும் வள்ளலே--தேசு
பொழிலிழக்கு நாளையே பூங்குழலி நீங்க
வெழிலிழக்கு மந்தோ விதண்.'

இது இரக்கந் தோன்றத் தடுத்தமையால், இரக்கத் தடைமொழி.

'என்னுயிர்க்குத் தீங்கில்லை யின்பந் தரும்வழியும்
பொன்னும் பெறலாமங் கானாலும் போக்கொழியே.'

இது தலைமைத் தடைமொழி.