248

இதனுள் இரண்டுக்கும் இரண்டு பேதஞ் சொன்னமையால், இருமை விதிரேகம்.

'ஏறடர்த்து வின்முருக்கி யெவ்வுலகுங் கைக்கொண்டு
மாறடர்த்த வாழி வலவனைக்--காறொழுதற்
கெஞ்சினா ரில்லெனினு மாய னிகனெடுமால்
வஞ்சியா னீர்நாட்டார் மன்'.

இது சிலேடை விதிரேகம்.

1"மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு
ளொலியும் பெருமையு மொக்கு--மலிதேரான்
கச்சி படுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும்."

இது உயர்பு விதிரேகம்.

'வன்மை யுயர்பு நிரைப்பேறு வான்புக
ழென்னு மியைபிலுண் டாகிலு--மன்னவரைக்
காசினியைச் சூழ்ந்துங் கடனேர மாட்டாது
மாசொன்ற லாலலையின் வாய்.'

இது செயற்கை ஏதுச் சொன்னமையால், காரகவேது விதிரேகம்.

'உளதென் றனங்க ளுடலைத் திருகில்
வெளியன்றி வேறோ ரிடை.'

இது இயற்கை ஏதுச்சொன்னமையால், ஞாபகவேது விதிரேகம்.

'கல்லாதார் வாயிற் கடுஞ்சொல்லாங் காரரவு
நல்லாரைச் சென்று நனிகடிக்குஞ்--சொல்லாலோர்
மந்திரமு மில்லை மகிதலத்தே மற்றுமொரு
தந்திரமு மில்லையதன் சால்பு'.

இது பாம்பாக உருவகஞ்செய்தும் அதன் சாதியினுள்ள குணத்தை வேறுபடுத்தலால், சாதி விதிரேகம்.

'மாதராய் நின்வதனந் தாமரையென் றிவ்விரண்டன்
மேதகு பேதம் விரித்துரைப்பிற்--கோதிலா
நின்கண் ணதுநின்ற நின்முக நீடுபுனற்
றன்கண் ணதுகமலந் தான்.'

இது ஒப்பு விதிரேகம்.

பிறவும் அன்ன. இவையனைத்துங் கூற்றினானுங் குறிப்பினானும் வருமாறு உய்த்துணர்ந்துகொள்க.


1. யாப்ப--காரிகை.