வரலாறு :-
'மலையி லலைகடலில் வாளரவின் வெய்ய
தலையிற் பயின்ற தவத்தாற்--றலைமைசேர்
பொன்மாது புல்லுபுகழ்ச் சோழன் புயம்புணர
வென்மா தவத்தோ மியாம்.'
இது காரகவேது.
'காதலன்மே லூடல் கரையிறத்தல் காட்டுமான்
மாதர் நுதல்வியர்ப்ப வாய்துடிப்ப--மீது
மருங்குவளை வின்முரிய வாளிடுக நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து.'
இது ஞாபகவேது.
'கரவோடு நின்றார் கடிமனையிற் கையேற்
றிரவோடு நிற்பித்த தெம்மை--யரவோடு
மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க
மாட்டாமை பூண்ட மனம்.'
இஃது உள்ளதன் அபாவம்.
'பொய்ம்மை யுடன்புணரார் மேலானார் பொய்ம்மையு
மெய்ம்மைசூழ் மேலாரை மேவாவா--மிம்முறையாற்
பூவலர்ந்த தாரார் பிரிந்தாற் பொலங்குழையார்
காவலர்சொற் போற்றல் கடன்.'
இஃது ஒன்றின் ஒன்று அபாவம்.
'கழிந்த திளமை களிமயக்கந் தீர்ந்த
தொழிந்தது காதன்மே லூக்கஞ்--சுழிந்து
கருநெறியுங் கூந்தலார் காதனோய் தீர்ந்த
தொருநெறியே சேர்ந்த துளம்.'
இஃது அழிவுபாட்டு அபாவம்.
'யாண்டு மொழிதிறம்பார் சான்றவ ரெம்மருங்கு
மீண்டு மயில்க ளினமினமாய்--மூண்டெழுந்த
காலையே கார்முழங்கு மென்றயரேல் காதலர்தேர்
மாலையே நம்பால் வரும்.'
இஃது என்றும் அபாவம்.
'காரார் கொடிமுல்லை நின்குழன்மேற் கைபுனைய
வாராமை யில்லை வயவேந்தர்--போர்கடந்த
வாளையேர் கண்ணி நுதன்மேல் வரும்பசலை
நாளையே நீங்கு நமக்கு.'