257

இனிச் சுவையொன்பதும் ஆமாறு.

1'ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா.'

இது சிருங்காரம்.

'சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி
யீர்ந்திட் டுயர்துலைதா னேறினா--னேர்ந்த
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வங்கட்
படைவீர மோவவன் பண்பு.'

இது வீரம்.

'கையில் விரனெரித்துக் காறளர்ந்து வாய்புலர்ந்து
மெய்பனிப்பத் தாளில் விழுமிவனோ--வுய்யக்
களிவேக மாறாக் கரிபுரளச் செங்கை
யொளிவே லுகைப்பா னினி.'

இஃது அச்சம்.

2'குடருங் கொழுப்புங் குருதியு மென்புந்
தொடரு நரம்பொடு தோலு--மிடையிடையே
வைத்த தடியு முடம்புமா மற்றிவற்றா
லெத்திறத்தா ளீர்ங்கோதை யாள்.'

இஃது இழிப்பு.

'முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்துகிரின்
றொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந்தொளிருங்--கொத்தினதாம்
பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
றன்னேர் பொழியுந் தரு.'

இது வியப்பு.

'கழல்சேர்ந்த தாள்விடலை காதலிமெய் தீண்டு
மழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான்--குழல்சேர்ந்த
தாமந் தரியா தசையுந் தளிர்மேனி
யீமந் தரிக்குமோ வென்று.'

இஃது அவலம்.

'கைபிசையா வாய்மடியாக் கண்சிவாரத் தீவிழியா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான்--வெய்யபோர்த்
தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று
போர்வேந்தன் றூதிசைத்த போது.'


1. திருக்குறள், 1329.

2. நாலடியார், 46.