258

இஃது உருத்திரம்.

'பள்ளியுள் வாழும் பறியறு மாதவர்
பிள்ளைக ளெல்லாம் பெரியர் முதிர்ந்தவர்
வெள்ளைகள் போல விலாவிற நக்குநக்
குள்ளவ ரெல்லா மொருங்குடன் மாய்ந்தார்.'

இது முறுகிய நகை.

1'தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.'

இது சாந்தம்.

'நவைதீ ரொன்பஃ தாகு முட்பொருள்
சுவைவாய்க் கிளப்பது சுவையென மொழிப.'

'மலைகரந்து போகாதோ வற்றாதோ பவ்வ
மலர்கதிரோன் வீழானோ வஞ்சி--நிலையெனக்குப்
பார்வேந்த ரொப்பரோ பாய்நீர்க் குருகுலத்தார்
போர்வேந்தே யான்முனிந்த போது.'

இது தன் வலி மிகுத்துச் சொன்னமையால், தன் மேம்பாட்டுரை.

'தாக்கிய விடத்தெனைத் தடுப்பவர் யாரென
ஊக்கங் கூறுத் லூக்க மாகும்.'

'மின்னிகரா மாதே விரைச்சாந் துடன்புணர்ந்து
நின்னிகரா மாதவிக்கீழ் நின்றருணீ--தன்னிகராச்
செந்தீ வரமலருஞ் செங்காந்தட் போதுடனே
யிந்தீ வரங்கொணர்வல் யான்.'

இது குறித்த பொருளைப் பிறிதொரு வழியாற் சொல்லினமையால், பரியாய மொழியாயிற்று. உதயணன்காதை முதலாயினவற்றுள் உள்ளுறை பொருளாகச் சொல்லியவெல்லாம் பரியாயம்.

'குறித்த பொருளைப் பிறிதொரு வழியாற்
புலப்பட வுரைத்தல் பரியாய மொழியே.'

169. சமாயிதம், உதாரதை, அவனுதி என்னும் அலங்காரங்கள்

தாங்குஞ் சமாயிதந், தான்முயல் செய்தி தனதுபயன்
ஆங்கத னாலன்றி மற்றொன்றி னால்வந்த தாகச் சொல்லல் ;
தீங்கி லுதாரதை செல்வமு முள்ளமுஞ் சீர்மைசெப்பல்;
ஓங்கு மவனுதி யுண்மை தவிர வுரைத்திடலே.


1. திருக்குறள் 318.