26

ஈற்றுயிர்மெய் கெடுதலும் உண்டு என்று சொல்லுவர் மேலாகிய புலவர் (எ-று.)

'தாழ்குழலே!' என்பது மகடூஉ முன்னிலை.

(27)

28. ளகர லகர மெய்கள் தகரத்தொடு புணர்தலும் இப்படலத்தின் புறனடையும்

எண்ணிரண் டாமொற்றுப் பன்மூன்று மெய்நின் றிவற்றின் பின்னே
அண்ணிய தவ்வரின் தட்டற வாம்;அவை யாய்தமுமாம்;
பண்ணிய சந்தி பகரா தனவும்;பகர்ந்தவற்றாற்
கண்ணி யுரைக்க மதியால் வனசக் கனங்குழையே!

(இ-ள்.) எண்ணிரண்டாம் ஒற்று பன்மூன்று மெய் நின்று இவற்றின் பின்னே அண்ணிய த வரின் த ட ற ஆம் -1 ளகார லகாரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் தகாரம் வந்து புணர்ந்தால், வந்த தகாரமானது முறையே டகார றகாரங்களாம்; அவை ஆய்தமுமாம் - 2 பின்னுமந்த ளகார லகாரங்கள் ஆய்தமாதலுமாம்; பண்ணிய சந்தி பகராதனவும் பகர்ந்தவற்றால் கண்ணி உரைக்க மதியால் - இச்சந்திகளுட் சொல்லாத சந்திகளுளவெனினும், இச்சொன்ன சூத்திரங்களானடக்கி முடிக்க (எ-று.)

'வனசக் கனங்குழையே!' என்பது மகடூஉ முன்னிலை.

(28)

சந்திப்படலம் முற்றும்.


ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சாரியையை, 'வற்று' என்றே கொண்டனர்; நன்னூலாசிரியர் 'அற்று' என்று கொண்டனர். அவற்றை அடியில் வரும் சூத்திரங்களால் அறிக.

'அவைதாம்
இன்னே வற்றே அத்தே அம்மே' (தொல். எழுத்து - சூ. 119.)

'அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்' (நன். சூ. 244.)

'பெயர் வேற்றுமையின் அகத்தும், தொகையின்கண்ணும்' என்பதற்குப் பெயர்ச்சொற்கள் வேற்றுமையுருபுகளை எற்கும் இடத்தும், வேற்றுமைத் தொகையிலும் என்பது கருத்து எனக் கொள்க. அவை உருபு புணர்ச்சியும், வேற்றுமைப் பொருட்புணர்ச்சியுமாம்.

1. முள் + தீது = முட்டீது.
முள் + தீது = முஃடீது.

2. கல் + தீது = கற்றீது.
கல் + தீது = கஃறீது.

அஃறிணை, பஃறொடை என்பவற்றையுங் கொள்க.