267

174. விராவு, பாவிகம் என்னும் அலங்காரங்கள்

பண்பு தரும்பல் லலங்காரஞ் சேர்ந்து பயிலுவது
நண்பு தரும்விரா வாம்;பா வி
மது நற்கவியின்
ஒண்பொரு ளின்றொடர் காப்பிய முற்றி னுரைபெறுமால் ;
விண்புடை நின்றிடை யைச்சீ றியமுலை மெல்லியலே!

(இ-ள்.) விராவலங்காரம், பல அலங்காரங்கூடி நிற்பது, பாவிகமென்பது, முழுக்காப்பியமும் ஒருங்கு பொருந்திய குணமாம் (எ-று.)

வரலாறு:--

'தண்டுறைநீர் நின்ற தவத்தா லளிமருவு
புண்டரிக நின்வதனம் போன்றதா--லுண்டோ
பயின்றா ருளம்பருகும் பான்மொழியாய் பார்மேன்
முயன்றான் முடியாப் பொருள்.'

இது *பல அலங்காரமும் மருவி நின்றமையால், விராவலங்காரமாம். விராவெனினும், விரவியல் எனினும், சங்கீரணம் எனினும் ஒக்கும். பாவிகம் காப்பியத் தன்மையாதலின், தனிச் செய்யுளால் எடுத்துக்காட்டு அமைவதன்று.

175. மேல் கூறிய அலங்காரங்களின் புறநடை

ஈண்டிய முற்றேக தேச வுவமை யுருவகமென்
றோண்டொரு மூன்றா வுருவக மோதுவர்; காரணமுந்
தூண்டு மகார ணமுமா மிகைமொழி சொல்வர்;எல்லாம்
வேண்டிய வேண்டிய வாறு விகற்பிப்ப மெல்லியலே!

மேல் வகுத்த அலங்காரமனைத்திற்கும் ஆவதோர் புறநடை கூறுகின்றான்.

(இ-ள்.) முற்றுருவகம், ஏகதேசவுருவகம், உவமையுருவகம் என உருவகத்தை மூன்றாகவும்; அகாரண மிகைமொழி, காரணமிகைமொழி என மிகை மொழியை இரண்டாகவும் விகற்பிப்பர்; ஏனைய அலங்காரங்களையும் வேண்டிய வேண்டியபடிக்கெல்லாம் விகற்பிப்பர் (எ-று.)


*"இதில் தற்குறிப்பேற்றம் கருமகாரகவேது, சிலேடை, உவமை, வேற்றுப்பொருள் வைப்பு, சுவை முதலிய பலவும் விரவியமை காண்க," என்பது பழைய குறிப்பு.