270

178. பிறர் கோள் கூறல்


தந்திர வுத்தி குணமத மேயுரை தர்க்கந்தன்னில்
வந்திய லெண்கோண் முதலா யுளமாலை மாற்றுமுன்னா
வந்தியல் சித்திர மென்றின் னவுமலங் காரமென்றே
தந்திய லச்சிலர் சொன்னா ரவற்றையுஞ் சார்ந்தறியே.

(இ-ள்.) தந்திரவுத்தியும், தந்திர குணமும், ஆசிரிய மதமும், தந்திரவுரையும், தர்க்க நூலிற்சொன்ன எண்கோளும், ஏதுவும், எடுத்துக் காட்டும், பிரமாணமும் முதலியனவும், மாலைமாற்று முதலிய சித்திரச் செய்யுளும் அலங்காரம் என்பாருமுளர். அவையெல்லா மாராய்ந்தறிக.

'முதலாயுள' என்றதனால் நிரனிறை முதலிய பொருள்கோளணியும், அந்தாதி, முரண் முதலிய தொடையணியும், மோனை முதலிய யாப்படியணியும், தொடர்நிலைச் செய்யுட்கு வல்லோர் வகுத்த மெய்ம்மகிழ்வாகிய செய்யுளினணியுமறிந்துகொள்க (எ-று.)

தந்திரவுத்தியாவன:--நுதலிப்பு குதல், ஓத்துமுறை வைத்தல், தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக் காட்டல், முடிவிடங் கூறல், தானெடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்ச்சொற் புணர்த்தல், இரட்டுற மொழிதல், ஏதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந்தொழுகல், ஒழிந்தது விலக்கல், எதிரது போற்றல், முன் மொழிந்து கோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்துமென்றல், உரைத்தாமென்றல், ஒருதலை துணிதல், எடுத்துக் காட்டல், எடுத்த மொழியினெய்த வைத்தல், அன்னதல்லதிதுவென மொழிதல், எஞ்சியசொல்லினெய்தக்கூறல், பிறநூன் முடிந்தது தானுடன்படுதல், தன்குறி வழக்கமிக வெடுத்துரைத்தல், சொல்லின் முடிவினப்பொருண் முடித்தல், ஒன்றினமுடித்தல் தன்னின முடித்தல், உய்த்துணரவைத்தல் என முப்பத்திரண்டாம் .

தந்திர குணமாவன:--சுருங்க வைத்தல், விளங்கச் சொல்லல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, உலக மலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்குதாரணந்தரல் எனப் பத்தாம் என்க.

ஆசிரிய மதமாவன:-- மறுத்தல், உடன்படுதல், பிறர்தம் மதமேற்கொண்டு களைதல், தா அனாட்டித் தனாஅது நிறுத்தல், இருவர்