271

மாறுகோ ளொருதலைதுணிவு, பிறநூற்குற்றங் காட்டல், பிறிதொடுபடாஅன் தன்மதம் வகுத்தல் என ஏழும் எனக்கொள்க.

தந்திர  வுரையாவன:-- சூத்திரந்தோற்றல், சொல் வகுத்தல், சொற்பொரு ளுணர்த்தல், வினாதல், விடுத்தல், விசேடங் காட்டல், உதாரணங்காட்டல், ஆசிரிய வசனங் காட்டல், அதிகார வசனங் காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல், கருத்துரைத்தல் எனப் பதினான்கு என்ப.
இவற்றுட் சில வருமாறு:--

1'நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.'
இஃது இரட்டுற மொழிதல்.

2'இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.'
இது ஏதுவின் முடித்தல்.

3'தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.'
இது மறுத்தல்.

4'அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.'
இஃது இன்னதல்லதிதுவென மொழிதல்.

5' மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.'
இது மாட்டெறிந்தொழுகல்.

6'பிரிவுரைக்கும் வன்கண்ண ராகி லரிதவர்
நல்குவ ரென்னு நசை.'
இது எதிர்மறுத்தல்.

7'அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்.'
இது தொகுத்துக் காட்டல்.

8'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.'
இது விளங்கச் சொல்லுதல்.


1. திருக்குறள், 324.

2. திருக்குறள், 270.

3. " 327.

4. " 241.

5. திருக்குறள், 941.

6. திருக்குறள், 1156.

7. " 321.

8. " 108.