'தண்மலர் வில்லிதன் போரா னமக்குத் தயையளித்த
கண்மலர்க் காவிக் கெதிரா வனவன்று கைப்பொலிந்த
பண்மலர் யாழ்பயில் வாரார்வு சேர்பதி நாகைமிக்க
தண்மை யகத்துப் பதுமத்த மாதர் தடங்கண்களே.'
இஃது ஆர்தோறும் ஒன்பது எழுத்து நின்று, கொப்பூழின் கண் ரகரவாகாரம் பெற்று, குறட்டிற் போதிவானவர் என்று வந்து, சக்கரத்தில் இருபத்துநான்கெழுத்தாய் முடிந்த ஆறாரைச் சக்கரம்.
*மாலவன்முதலியவிமைய (வாதிபவானவ) (பதிபகவானபுமி) (பதிபவானபுமி) ரெவணமிககாலனெழி(னலல) (லவ) (லல) னகாரியலஙகிதன வெசெடனினனுருவாநதெவாகாஙகதுவா (ண)(ன)(ன) ஙகமிகாலசிலரெனறபொனறிவுளனெதிரிபவனமகாமுரணவா சொனனமனகா(லனும) (லுனு) (லனு)னறுவெதவாலென(னான)(றான) (னான) கழகுநாடனமிலகனறுனனியவெனறுகநது சொரி(யிரெயிலெப)(யமிரெயிலெய) (யயிரெயிலெய) தாயயொவினொஙகூரநதமரொஙகூழவாமமா [வு] ணடாரநதவிரைககொலப பூணமாலை [ச] சார (பி) (பி) (ம) னமகிமடி (ததொ) (ககொ) (ததொ) னறியசசடையெதபூணடினியுயிரமெறபொறபொடெணணியலாரநனனெடு (மாலையிடததி) (யிடககினு) (யிடககினு) னுய ததமாலகொளாயவிணணினினலலார(மணந) (மனன) (மனன) லலாரவிழததனரசிற[ர] பபூககூறா [விச] [விசி] பணணொகரொ
*'இக்கவியும்,இதன்கீழ் உரைத்த சித்திரத்தொகுதியும் பெரும்பான்மையும் பிரதிகளிலில்லை. உள்ள பிரதிகளிலுங் காலாந்தரத்திற் கர லிகித வழுக்களான் மிக மாறுபட்டுக் கிடக்கின்றன. கவியின் பிரத்தார இலக்கணத்தால் அஃதோர் பேரருஞ்செய்யுள் என்று தோன்றுவதானும், ஏதாவதொருவகையாய் நாம் அதனைத் திருத்தி அச்சிடுவது தகுதியன்றாதலானும், அதன் நிச்சயரூபங் கண்டு சக்கரத்தமைத்துக் காட்ட வல்ல சித்திரக்கவிகள் எவ்விடத்தாயினும் இருத்தல் கூடுமாதலானும், சித்திரக்கவிகளுள் தனக்கிணையில்லாத பேராற்றலுடையதோர் நூதனக் கவியை இறந்துபோக விட மனமொவ்வாமையானும் தென்னாட்டிலும் யாழ்ப்பாணத்திலுஞ் சென்னையிலுந் தமிழில் மிகப் பிரபல வித்துவான்களாயிருந்தோர் மூவருடைய பிரதிகளிற் கண்ட ரூபமாக இதனை இவ்விடம் பதிப்பித்திருக்கின்றோம். பிரதியில் ஒன்றற்கொன்று பேதப்பட்டனவற்றை இருதலைப்பிறையினுள்ளும், அதிகப்பட்டனவற்றை இருதலைப்பகரத்தினுள்ளுங் காட்டியிருக்கின்றோம்' என்பது பழைய குறிப்பு.