(ப) (ம) (ப) பெணணாரநது (நிததலு) (நிககலு) (நிககலு) வாயததாரஙகொளகையினொயதிரததாரலி (லி) (வி) (வி) லொயயெனவெத (து) (த) (து)து(நி)(னி)(னி)னை[யா]வெலகெனறுவளவன பாரமிகுசிரெ.
இது எட்டாரைச் சக்கரம்.
இதற்குப் பிரத்தார இலக்கணமாவது:--
எட்டாராய் நேமி பதினேழாய் ஆர்தோறும்
பட்ட பதினே ழெழுத்தாயச்--சுட்டிய
கொப்பூழி னீற்றெழுத்தாய்க் கொண்டபுறத் துண்டத்துத்
தப்பா விருபத் திரண்டெழுத்தாய்த்--துப்பேற
வீரெட் டடியு மெழிற்சக் கரக்கவியை
நேரிட் டெழுதி நிறுத்துங்காற்--சீரிட்ட
நவ்வு மனநடையி னன்கண்ணி னொத்தியலுஞ்
செவ்விதனை யீங்கியலச் செப்பிடுவ--னெவ்வாயு
மொன்றுவிட் டொன்றா மொளிநேமி யெட்டின்க
ணின்றபுகழ் வீரன் றிருநாமம்--பின்றாமை
மன்னியவோ ரெட்டாகு மாலைமாற் றாமதுவு
முன்னு சுழிகுளமு மோரடியாந்--துன்னிய
வீரடியுங் கோமூத் திரியாந் தமிழ்க்கூட்டுக்
கூரிய கூட சதுக்கமாஞ்--சீரிய
விற்பூட்டு மேது வெனுமிவையா மிந்நூலிற்
கற்பார் கருத்தாக் களையுரைத்த--பொற்பார்
கவியென்றும் வள்ளுவன்பா மூன்றினு மூன்று
செவியென்றும் வந்து சிறக்கும்--புவியின்க
ணொன்றுக்கொன் றுள்ளாப் பதினெட்டு வட்டமிட
நின்றபதி னேழு நிலத்து.
ஒன்றுக்கொன்றுள்ளாகப் பதினெட்டு வட்டங் கீறப் பதினேழு நேமியுளவாம். அதன் கண் இச்சக்கரக் கவியைப் புறத்து நின்றும் வலமாகக் கடலாகவும் எழுதிப் போதவும் எழுதி இவ்வண்ணம் முறையானே எட்டடியும் எழுதுவது. எட்டாமடியினிறுதி தொடங்கிப் புறநேமித் துண்டம் எட்டினு மொருதுண்டத்துக் கோரடியாக எழுதுவது. இவ்வண்ணம் எழுத முன்பிலெட்டடியின் துண்டவெழுத்துப் பின்பிலெட்டடிக்கு ஈற்றெழுத்தாம். இதன்கண் இரண்டா நேமியில் கயிலகுலகரனும் நான்கா நேமியில் காவேரி வல்லவனும், ஆறாநேமியில் கண்ணுமுனறிவானும் எட்டா