நேமியில் கரிகாலகன்னனும், பத்தாநேமியில், விக்கிரம சோழனும், பன்னிரண்டா நேமியில் வளவநாராயணனும், பதினாலா நேமியில் வீரராசேந்திரனும், பதினாறாநேமியில் பரநிருபகாலனும் என எட்டுப் பெயரும்
புலப்படும்.
இதன்கண்,
'வினைதேர் வீர சோழ
னலர்வனம் வானரி மார னாலையோ
மணிவீர நாராயண னோவது.'
என்னும் தமிழ்க்கூட சதுக்கமும்,
'வீரத்தால் விண்ணாதல் மெய்த்தவத்தால் வீடாத
லாரத்தா லாள்வதெவர் தாடேறச்--சீரொத்த
மின்னார் படைத்தடக்கை வீரரா சேந்திரனுக்
கொன்னராய் வாழ்வ துறின்.'
'விண்கூ டலசங்க மத்துடைந்த வேல்வடுக
ரெண்கூ டலறு மிருங்கானிற்--கண்கூடப்
பண்ணினான் றன்னுடைய பாதம் பணியாமைக்
கெண்ணினார் சேரு மிடம்.'
'ஈண்டுநூல் கண்டா னெழின்மாலைக் கூற்றத்துப்
பூண்டபுகட் பொன்பற்றி காவலனே--மூண்டவரை
வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை மாறன்றன்
சொல்லின் படியே தொகுத்து.'
'மின்னார் வடிவேற்கை வீரரா சேந்திரன்றன்
பொன்னார் பதயுகளம் போற்றாது--கன்னாடர்
புன்கூ டலசங்க மத்தினொடும் போருடைந்தார்
நன்கூ டலசங்க மத்து.'
என்னும் வெண்பாக்களுங் காதை கரப்பாய் வந்தன. இவற்றினிறுதி வெண்பாவின் நாலாமடிக்கு எழுத்து முன்னின்ற மூன்றடியும் பெருக்கிக் கொள்ள வந்தமையால், கூடசதுக்கமுமாயிற்று. மாலை மாற்றின் முன்பு சொன்னதும் இதனுள் அடங்கியதெனக் காண்க.
'கய(லி)(லி)(வி) யலகொவளவனறனைச(ச)(ச) (சா)ததிரம.
இது ஏக பாதம். இதனை நாற்காலுச்சரித்துப் பொருளை வேறாக்கிக் கண்டுகொள்க.