283

"நாற்பெரும் பண்ணு மதினெழு திறனுந்
தோற்றிய வின்னிசை செந்துறை யாகும்
ஏனைய வெல்லாம் வெண்டுறையாகும்."

என்பதனாலறிக.

தந்திரவுத்தி, முன்பே சொல்லியன.

தருக்கமாவது, நியாயசூடாமணி, புதியாநுட்பம் ஆகியவற்றுட் கண்டுகொள்க.

180. விரவியல், மணிப்பிரவாளம், கிளவிக்கவி, துறைக்கவி,
பிரளிகை முதலிய வினாவிக் கவிகள்.

இடையே வடவெழுத் தெய்தில் விரவிய லீண்டெதுகை
நடையேது மில்லா மணிப்பிர வாளநற் றெய்வச்சொல்லின்
இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கவியின்
தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே.

(இ-ள்.) வடவெழுத்து விரவுவது விரவியலாம் ; வடமொழி விரவின் மணிப்பிரவாளமாம்; அதற்கெதுகையில்லை. கிளவிக்கவியும், துறைக்கவியும், பிரளிகை முதலிய வினாவிக்கவியும் அறிக. (எ-று.) (40)

181. துறைக்கவியும், கிளவிக்கவியும் ஆமாறும்,
செய்யுளின் பயனும்.

மறங்களி தாது வயிரபஞ் சம்பிர தந்தவசுக்
குறங்கணி கம்முத லாந்துறை யாகுங் குவலயத்தே
திறம்பல போக்குங் கிளவிக் கவிசெய் யுளின்பயனே
அறம்பொரு ளின்ப மொடுவீ டெனவறி ஆரணங்கே!

(இ-ள்.) மறம், களி, தாது, வயிரபம், சம்பிரதம், தவசு, குறம், கணிகம், முதலான எல்லாந் துறைக்கவியாம்; திறம் பல போக்குங் கிளவிக்கவி; செய்யுளின் பயன் தர்மார்த்த காமமோக்ஷம் என்ப. (எ-று.) (41)

அலங்கார முற்றும்.

_______