அந்தச் சிறப்பு
தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் றான்மொழிந்த
படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின்
திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்
கடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே.
நேரிசை வெண்பா.
ஓரா தெழுதினே னோருரையை யொண்பொருளை
யாராய்ந்து கொள்வ தறிவுடைமை--சீராய்ந்து
குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.