நாட்டார், நாட்டாரை, நாட்டாரால், நாட்டாருக்கு, நாட்டார்பக்கலினின்று, நாட்டாருடைய, நாட்டார்பக்கல், நாட்டீர் எனவும்;
யானை, யானையை, யானையால், யானைக்கு, யானைபக்கலினின்று, யானையுடைய, யானைபக்கல், யானாய் எனவும்;
மரங்கள், மரங்களை, மரங்களால், மரங்களுக்கு, மரங்கள்பக்கலினின்று, மரங்களுடைய, மரங்கள்பக்கல், மரங்காள் எனவும்;
சாத்தனார், சாத்தனாரை, சாத்தனாரால், சாத்தனாருக்கு, சாத்தனார்பக்கலினின்று, சாத்தனாருடைய, சாத்தனார்பக்கல், சாத்தனாரே எனவும்;
கொற்றியார், கொற்றியாரை, கொற்றியாரால், கொற்றியாருக்கு, கொற்றியார்பக்கலினின்று, கொற்றியாருடைய, கொற்றியார்பக்கல், கொற்றியாரே எனவும்;
யானையார், யானையாரை, யானையாரால், யானையார்க்கு, யானையார்பக்கலினின்று, யானையாருடைய, யானையார் பக்கல், யானையாரே எனவும் வரும்.
(3)
32. வடமொழியிற் காரக பதங்கள் இவ்வளவினவாம் என்பது
ஆதியி லாண்பெ ணலியென்று நாட்டி யதினருகே
ஓதிய வேற்றுமை யேழையுஞ் சேர்வித் தொருங்கதன்பின்
வாதிய லொன்றா டிரண்டு பலவென வைத்துறழத்
தீதிய லாத வறுபத்து மூன்றுறுந் தேர்ந்தறியே.
(இ-ள்.) வடமொழிக் காரக பதம் வருமாறு:- ஆண் பெண் அலி என்று வைத்து, அவையிற்றின் பின் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமை இறுதியாக எழு வேற்றுமையும் சேர்த்து ஏக வசனம் துவி வசனம் பகு வசனமென்னும் மூன்று வசனத்தையும் கூட்டியுறழ அறுபத்து மூன்று காரக பதமாம்; பின்னையும், உயிரிறுதியும் ஒற்றிறுதியுமாகக் கூறுவார்க்கு நூற்றிருபத்தாறாம்; அவையெல்லாம் வடமொழியிற் கண்டுகொள்க.
(4)
33. முதல்வேற்றுமை முதலிய வேற்றுமையுருபுகள்
கூறிய சொற்பின் பொருண்மாத் திரத்திற் குலவெழுவாய்
வீறுடை வேற்றுமை யெய்து மொருவ னொருத்தியொன்றின்
ஏறிய சுப்பல விற்சுவ்வுங் கள்ளுமெங் கும்மழியும்
ஊறிய சுச்சிறப் புப்பல ரிற்கள் ளொழிந்தனவே.
(இ-ள்.) முன் சொன்ன எட்டுப் பிரகிருதிக்கும் பின்னாகச் சொல்லின் பொருண் மாத்திரத்தை விளக்குதற் பொருட்டாகச்சு