32

1 'முதல் வேற்றுமையினுருவம் விளிவேற்றுமை யொழித்தெங்கு முறப்பெறுமே.' என்பதனால், வேளாளரை, நாட்டாரை, வேளாளர்களை, நாட்டார்களை, தவசிகளை, நம்பிமாரை என்புழி இரண்டாம் வேற்றுமையின் முன்பு எழுவாய் வேற்றுமையினுருபுகள் வந்தவாறு காண்க.

'மூன்று ஓடு ஒடு ஆலாம் பகர் கருத்தா வையநிகழ் கரணத்தின் வரும்' என்பதனால், தச்சனாலெடுக்கப்பட்டது வீடு தட்டானாற் செய்யப்பட்டது தாலி எனவும், வாய்ச்சியாற் செதுக்கப்பட்டது மரம், எழுத்தாணியாலெழுதப்பட்டது ஏடு எனவும் வருவன முறையே மூன்றாம் வேற்றுமையில் கருத்தாக் காரகமும் கரணக் காரகமுமாம்.

சாத்தனொடு உண்டான், சாத்தனோடு உண்டான், ஊரோடு கலந்தான் என்பவற்றில் ஒடு, ஓடு என்னும் பிரத்தியங்கள் மூன்றாம் வேற்றுமையிற் கிரியா பதத்தோடுங் கூடி முடிந்தவாறு கண்டுகொள்க.

தொல்காப்பியனார், ஒடு என்னும் பிரத்தியமொன்றே மூன்றாம் வேற்றுமைக்கு உருபாகச் சொன்னார். 'ஆலும் ஆனும் மூன்றனுருபே' என்றார் அவிநயனார்.

2 "சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇயற்று."

என்புழி ஆலென்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வந்தவாறு காண்க.

"வாரம் புலர்ந்த மனத்தார் மணிக்குறங்கின்
ஈரம் புலர்ந்தாலு மேகாரிவ் - வீரர்
அகிலோடு காவிரிநீ ராடி வருவார்
துகிலோடு சுற்றிச் சுழன்று."

எனவும்,

3"பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்
உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ
மனனோடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப்
புனனாடன் பேரே வரும்."

எனவும்,

"சுழியோ டெறிபுனற் பொன்னிநன் னாடன் சுரர்குருவின்
வழியோ னமலன் மயிலையன் னீர்மணி வாயினின்றும்


1. இந்நூலின் 30 ஆம் - சூ.
2. திருக்குறள் , 660.
3. யாப்பருங்கல விருத்தி, சூ-12, உரை மேற்கோள்.