33

மொழியோ தெரிந்தில கொங்கையுஞ் செய்ய முகத்திரண்டு
விழியோ படுகொலை யோவிலங் கோவந்து நின்றதுவே."

எனவும் இவையிற்றில் ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமைப் பிரத்தியம் வந்தவாறு காண்க.

"நோயொ டுறவென்னை கொல்லோ நுனையெஃகின்
வாயிடை மாளா தவர்க்கு."

1"வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு."

என ஒடு என்னும் பிரத்தியம் வந்தவாறு கண்டுகொள்க.

'முதல் வேற்றுமையின் உருவம் விளிவேற்றுமை யொழித்தெங்கு முறப்பெறுமே' என்பதனால், வேளாளராற்செய்யப்பட்டது, தவசிகளாற்செய்யப்பட்டது, நம்பிமாராற்செய்யப்பட்டது என மூன்றாம் வேற்றுமையின் முன்னே எழுவாய் வேற்றுமை வந்தவாறு கண்டுகொள்க.

'குப்பொருட் டென்பது மெய்திகழ் வேற்றுமை நான்காவதாமிக்க கோளியிலே' என்பதனால், இரப்பானுக்குச் சோறிட்டான், ஏற்பானுக்குப் பொன்னீந்தான், நல்லானுக்கு மந்திரங் கொடுத்தான், தெய்வத்துக்குப் பூவிட்டான் என நான்காம் வேற்றுமையிற் கோளிக்காரகம் வந்தவாறு காண்க. 'முதல் வேற்றுமையின் உருவம் விளிவேற்றுமை யொழித்தெங்கு முறப்பெறுமே' என்பதனால், நாட்டார்க்கு இட்டான், வேளாளர்களுக்கு அளித்தான், தவசிகளுக்குக் கொடுத்தான், நம்பிமார்களுக்கு ஈந்தான் என நான்காம் வேற்றுமையின் முன் எழுவாயுருபு வந்தவாறு காண்க. கரும்பு, சோறு என நிறுத்திப் பொருட்டு என நான்காம் வேற்றுமையுருபு வருவித்து, இன் என்னுஞ் சாரியைச்சொல் இடைப்படுத்துச் சந்தி காரியம் பண்ணி, கரும்பின்பொருட்டு வேலியிட்டான், சோற்றின் பொருட்டு ஊர் சேவித்தான் என முடித்துப் பொருட்டுருபு வந்தவாறு காண்க.

(6)

35. இதுவும் அது.

ஆனாளா ரார்க ளதுவின வாறிற் குடைப்பின்குவ்வேல்
நூனா டியபத மாநுவ லாதார மேழினிற்கே
தானா முழைவயின் பக்க லுழியில்கண் சார்பிறவும்
வானா மலிநின்ற வற்றில் வரூஉமைந் தவதியிலே.


1. திருக்குறள், 552.