37

'முதல் வேற்றுமையின் உருவம் விளி வேற்றுமை யொழித்தெங்கு முறப்பெறுமே' என்பதனால்,

வரலாறு:-

பிள்ளாய், ஆனாய் எனவும்;
உடையாள், அரியாள் எனவும்;
செல்வீ, அரங்கீ எனவும்;
இராமனே, மன்னவனே எனவும்;
மன்னவ, நாயக எனவும்;
சாத்தா, கொற்றா எனவும்;
பெரியான், காத்தான் எனவும்;
சாத்தாவோல், கொற்றாவோல் எனவும்;
சாத்தாவோய், கொற்றாவோய் எனவும்;
அரையீர், வெளியீர் எனவும் வரும்.

இவற்றின் இறுதி சிதைந்து முடிந்தபடி அறிந்து கொள்க.

அளபெடை சாத்தாஅ, கொற்றீஇ எனவரும். பெண்காள், மரங்காள் என்பவற்றிற் காள் என்னும் பிரத்தியமாமாறு காண்க. விளி வேற்றுமைக் காரக பதங்களெல்லாம் இறுதி உதாத்தமாக உச்சரித்தாலல்லது பொருள் விளங்காவென்க. அளபெடையான் வருமுருபுகள், சேயாரை விளிக்கும்போதல்லது வாரா. ஆய் முதலாகிய பிரத்தியங்கள் அளபெடுத்தலும் அன்றி, இறுதி அளபெடுத்தலும், இறுதி சிதைந்து நின்ற ஈற்றயலெழுத்து அளபெடுத்தலும், அவ்வீற்றயல் திரிந்து அளபெடுத்தலுமுண்டு.

37. இதுவும் அது.

உன்னுமென் னுந்தன்னும் யாவுமவ் வும்மிவ்வு முவ்வுமெவ்வு
மென்னு மிவற்றின்முன் னீநான்றான் சுவ்வரில் யாமுதல
வன்னும்வள் ளுந்துவ்வும் வையுஞ் சிறப்பினீர் நாமொடுதாம்
பின்னிலைந் தும்வர் பலரிற்கள் ளோடுவர் கள்ளென்பவே.

(இ-ள்.) உன் என் தன் எனுமூன்றும், யா அ இ உ எ எனும் ஐந்துமாக எட்டுப் பிரகிருதியையும் வேற்றுமைப் பிரத்தியத்தோடு கூட்டி முடிக்கும் பொழுது முன்பு நின்ற மூன்றையும் சுப்பிரத்தியம் பண்ணி எழுவாய் வேற்றுமையில் நீ நான் தான் என அடைவே ஆதேசமாக்குக. இவையிற்றைச் சிறப்பிக்கக் கருதின பொழுது நீர் நாம் தாம் என ஆதேசமாக்குக. யா முதலாகிய ஐந்தினையும் வன் வள் து வை என்றடைவே பிரத்தியங் கொடுத்து