4

ஆம் - வல்லொற்றும் மெல்லொற்றும் இணைந்து வருவது வர்க்கவெழுத்தென்னும் பெயரதாம்; வன்மைமேல் உகரம் உறுவது நையும் தொடர் மொழி1 பின்னும் நெடில் பின்னுமே - தனி நெடிற்பின்னும் பல எழுத்துக்கள் தொடருமொழிக்கண்ணும் ஈற்றிலே க ச ட த ப ற என்னும் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால் அந்த உகரமானது குறுகிக் குற்றியலுகரம் என்னும் பெயரதாம் (எ - று.)

(2)

3. எழுத்துப் போலி, இறுதி வினா, புள்ளி பெறும் எழுத்துக்கள், சுட்டு, குற்றியலிகரம்

அகரம் வகரத்தி னோடியைந் தௌவாம்; யகரத்தினோ
டகர மியைந்தைய தாகும்; ஆ ஏஓ வினாவந்தமாம்;
எகர ஒகரமெய் யிற்புள்ளி மேவும்;அ இஉச்சுட்டாம்;
இகரங் குறுகி வருங்குற் றுகரம்பின் யவ்வரினே.

(இ - ள்.) அகரம் வகரத்தினோடு இயைந்து ஒளவாம் - அகரமானது வகரத்தோடுங்கூடி ஒளகாரமாம்; யகரத்தினோடு அகரமியைந்து ஐயதாகும் - பின்னும் அகரமானது யகரத்தோடுங் கூடி ஐகாரமாம்; ஆ ஏ ஓ வினா அந்தமாம் - ஆ ஏ ஓ என்னும் மூன்றெழுத்தும் மொழியினது ஈற்றிலே நின்று வினாவெழுத்து என்


1. ஈண்டுத் 'தொடர்மொழி' என்றது இரண்டின் மிக்க எழுத்துக்களையுடைய மொழியை. இஃது இரண்டின் மிக்கவை பல என்னும் வடமொழி நடை பற்றியது. ஒன்றின் மிக்கவை பல என்பது தமிழ்நடை என்க. குற்றியலுகரத்தைப் பற்றி,

"நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே."

(தொல், எழுத்து. மொழிமரபு, சூ. 3.)

என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியது காண்க.

குற்றியலுகரம் ஈற்றுக்கு அயலெழுத்தை நோக்கி, நெடிற்றொடர், உயிர்த்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர், மென்றொடர், இடைத்தொடர் என அறுவகையாம்.

மூவின மெய்யையும் ஒற்றென்னும் ஒரு வகையினடக்கிக் குற்றியலுகரம் நான்கு வகையாம் என்பாரும் உளர்.