41

தில், 'வியன்கருவி தீதில் கரணம்' என்பதனால், பூப்பறித்தற்குக் கருவியாக நின்ற கரம் கரணக் காரகமாயிற்று; 'விமலனுக்குத் துரைநின்ற தீவினை நீங்க இட்டான்' என்பதில், 'கோதறு கோளிமன் கொள்பவ னாகும்' என்பதனால், பூவைக் கொள்பவனான விமலன் கோளிக் காரகமாயினான் (எ-று.)

1"இந்திரன் தாமரை யைக்கரத் தாற்கொய் திறைவனுக்குத்
தந்திருங் குற்றத்தி னீங்கிவிண் மேல்இருந் தான்எனலும்
வந்தன காரக மெல்லாம் வகுத்த வழிமுறையே."

என்றார் பிறரும்.

இனி முன் சொல்லப்பட்ட ஆறு காரகமும் இருபத்து மூன்றாய் விரியுமென அவற்றின் வேறுபாடு சொல்லுகின்றார்.

(2)

40, 41. முன் சொல்லப்பட்ட ஆறு காரகங்கள் இருபத்து மூன்றாதல்

காரணந் தான்தெரி தான்தெரி யாக்கரு மந்தலைமை
ஆரணங் கேயைந் துளகருத் தா;அச லஞ்சலமாம்
பூரண மாகும் அவதி; புறமக மாங்கரணம்;
சீரணங் கார்வங் கிடப்பிரப் பாங்கோளி தேமொழியே !

பற்றொடு வீடே யிருபுறந் தான்தெரி தான்தெரியா
நற்கருத் தாத்தீ பகமாங் கருமம்;நான் காதாரமேற்
பொற்பமர் சேர்வு கலப்புப் புலனொ டயலென்பதாம்
கற்பு மலியு மிருபத்து மூவகைக் காரகமே.

(இ-ள்.) காரணக் கருத்தாவும், தான் தெரி கருத்தாவும், தான் தெரியாக் கருத்தாவும், கருமக் கருத்தாவும், தலைமைக் கருத்தாவும் என ஐந்து வகைப்படும் கருத்தாக் காரகம்; அசலம் என்னும் அவதியும், சலம் என்னும் அவதியும் என இரண்டு வகைப்படும் அவதிக் காரகம்; புறக் கரணம், அகக் கரணம் என இரண்டு வகைப்படும் கரணக் காரகம்; (கரணம் எனினும் கருவி எனினும் ஒக்கும்.) ஆர்வக் கோளி, கிடப்புக் கோளி, இரப்புக் கோளி என மூன்று வகைப்படும் கோளிக் காரகம்; பற்றுக் கருமம், வீட்டுக் கருமம், இருபுறக் கருமம், தான் தெரி கருமம், தான் தெரியாக் கருமம், கருத்தாக் கருமம், தீபகக் கருமம் என ஏழு வகைப்படுங் கருமக் காரகம்; சேர்வாதாரம், கலப்பாதாரம், புலனாதாரம், அயலாதாரம் என நான்கு வகைப்படும் ஆதாரக் காரகம் (எ-று.)


1. இது கி. பி. 1895-ஆம் ஆண்டுப் பதிப்பில் அடிக்குறிப்பாயமைந்துள்ளது.