49

ஊரின்கட்குருவி = ஊர்க்குருவி என்பது போல, நீர்க்காக்கை, கடற்பன்றி, மலைக்குறவன் என ஏழாம் வேற்றுமையிலும் வரும்.

விளி வேற்றுமையில் சொல் தொக்கு முடிதலில்லை.

'கரும்பினுடைய வேலி, மாடத்தினுடையவோடு' என நாலாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமையாகவும்; 'எருமையினுடைய பால், யானையினுடைய மதம்' என ஐந்தாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமையாகவுந் தொகுத்தாலுங் குற்றமில்லை.

இனி வேற்றுமைச் சார்வாகிய சொற்களும் அழிந்து தொகுமாறு:-

தயிரினாற்குழைத்த சோறு = தயிர்ச்சோறு,
மருந்துகளால் ஆடப்பட்ட எண்ணெய் = மருத்தெண்ணெய்,
சங்கரனுக்கு மகனாயுள்ள சாத்தன் = சங்கரன் சாத்தன் என வரும்.

1இனி 'இடைச்சொல் அழி தொகை' என்பதும் ஒன்றுண்டு. அஃதாமாறு:-

இருப்பைப் பாலாற்கொள்ளப்பட்ட நெய் = இருப்பை நெய்,
பாண்டி நாட்டுக் கடலின் கரை = பாண்டிக் கரை என வரும்.

இதனை வடமொழிப் புலவர் மத்திமபத லோப சமாசம் என வழங்குவர்.

(1)

45. தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகையாம் என்பது

தற்புரு டன்பல நெற்கன்ம தாரயந் தாங்கியசீர்
நற்றுவி குத்தொகை நாவார் துவந்துவம் நல்லதெய்வச்
சொற்பயன் மாந்தர்க ளவ்விய பாவமி தென்றுதொன்மை
கற்பக மாப்பகர்ந் தார்தொகை யாறும் கனங்குழையே !

(இ-ள்.) 2தற்புருட சமாசமும், பலநெற் சமாசமும், கன்மதாரய சமாசமும், துவிகு சமாசமும், துவந்துவ சமாச


1. ஈண்டு இடைச்சொல் என்றது இடையில் உள்ள சொற்களை; நால் வகையாகிய சொற்களில் ஒன்றாகிய இடைச்சொல்லை அன்று என அறிக.

2. "தற்புருடன் - வேற்றுமைத் தொகை, வெகுவிரீகி - அன்மொழித் தொகை, கருமதாரயன் - பண்புத்தொகை, துவிகு - எண்ணொடு புணர்ந்த எண் தொகை, துவந்துவன் - உம்மைத் தொகை, அவ்வியபாவம் (அவ்வியயீ பாவம்) - முன்னும் பின்னும் மொழி அடுத்து வரும் இடைச்சொல் தொகை," என்பர் பிரயோக விவேக நூலார். (பிரயோக விவேகம்-ச-ப-3-ஆம் சூத்திர விசேட உரை.)