5

னும் பெயரவாம்; எகரம் ஒகரம் மெய்யில் புள்ளி மேவும் - எகர ஒகரங்களும், மெய்கள் பதினெட்டும் மேலே புள்ளி பெற்றுப் புள்ளியெழுத்தென்னும் பெயரவாம்; அ இ உ சுட்டாம் - அ இ உ என்னும் மூன்றெழுத்தும் மொழிக்கு முதலிலே சுட்டெழுத்தென்னும் பெயரவாம்; இகரம் குறுகி வரும் குற்றுகரம் பின் யவ்வரினே - குற்றியலுகரத்தின் பின்னர் யகரம் வந்து புணர்ந்தால் இகரமாம்; அந்த இகரமானது குறுகிக் குற்றியலிகரம் என்னும் பெயரதாம் (எ-று.)

(3)

4. சொன்முன்வரும் வினா, எழுத்துக்கள் பிறக்கும் ஒலி முயற்சியின் வகை,
இடைநிலை மயக்கம்

ஏயாஎச் சொன்முன் வினா; எடுத் தல்படுத் தல்நலிதல்
ஓயா துரப்பல் எனநால் வகையிற் பிறக்குமெய்கள்
சாயா மயக்கந்தம் முன்னர்ப் பிறவொடு தாமும்வந்து
வீயாத ஈரொற்று மூவொற் றுடனிலை வேண்டுவரே.

(இ - ள்.) ஏ யா எ சொல் முன் வினா - எகர ஏகாரங்களும் யாவும் மொழியினது முதலிலே நின்று வினாவெழுத்தென்னும் பெயரவாம்; எடுத்தல் படுத்தல் நலிதல் ஓயாது உரப்பல் என நால்வகையில் பிறக்கும் மெய்கள் சாயா மயக்கம் தம் முன்னர் பிறவொடு தாமும் வந்து வீயாத ஈரொற்று மூவொற்று உடனிலை வேண்டுவரே - எடுத்தும் படுத்தும் நலிந்தும் உரப்பியுஞ் சொல்லுதலாகிய நால்வகையினாலேயும் பிறக்குமெழுத்துக்களானவை1 தம் முன்னர்த் தாம் வந்து மயங்கியும் தம்முன்னர்ப் பிறவெழுத்துக்கள் வந்து மயங்கியும் ஈரொற்றுடனிலையாயும் மூவொற்றுடனிலையாயும் வரப்பெறும் என்று சொல்லுவர்கள் மேலாகிய புலவர்கள் (எ - று.)


1. மெய்கள் தம்முன் தாம் வந்து மயங்குதல் உடனிலைமெய்ம்மயக்கம் எனப்படும்; தம்முன் பிற வந்து மயங்குதல் வேற்றுநிலைமெய்ம்மயக்கம் எனப்படும். ஈண்டு ஈரொற்றுடனிலையாயும், மூவொற்றுடனிலையாயும் என்றவற்றிற்கு ஈரொற்று ஒன்று கூடியும், மூவொற்று ஒன்று கூடியும் என்பன பொருள்.

சக்கிரி, அண்ணம், அல்லி - உடனிலை} ஈரொற்று
கற்க, கங்கன், தெவ்யாது - வேற்றுநிலை

வய்ங்குழல், பாழ்ங்கிணறு -- வேற்றுநிலை} மூவொற்று
வேய்க்குறை, வோக்குறை -- இவை இருநிலை யானும் மயங்கின