இவ்வண்ணம்,
மலையைத் தாங்கி = மலை தாங்கி,
கல்லாற்றளி = கற்றளி,
தாலியின்பொருட்டுப் பொன் = தாலிப்பொன்,
கள்ளரினின்றும் பயம் = கள்ளர் பயம்,
தாமரையினுடைய கிழங்கு = தாமரைக் கிழங்கு,
ஊரின்கட்குருவி = ஊர்க்குருவி
என்பன முற்பதம் முறையே இரண்டாம் மூன்றாம் நாலாம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் வேற்றுமையாதலின், அவ்வவ்வேற்றுமைத் தற்புருடனாம். நஞ்ஞுத் தற்புருடன் வடமொழியின் அல்லது இல்லை. அஃதாமாறு:
"தடைந வுடலடையிற் றன்னுடல்போ மாவி
அடையி னுடறெற்று மாற்றாம்."
என்பதனால் நவ்வென்னும் ஒற்றின்மேல் அகரவுயிரேறி நகரமாய்க் கிடந்த சொல், தொகையின்கண் உயிர்மெய் வரும்பொழுது நகரவொற்றழிந்து அகரமாய் நிற்கும்; உயிர் வரும்பொழுது நகரவொற்றுப் பின்னாய் அகரம் முன்னாய்த் தெற்று மாறி நிற்கும்.
உதாரணம்:-
ந + நாதன் = அநாதன்; ந + உசிதம் = அநுசிதம் என வரும்.
ஆயிரந்தளி கூடினவிடம் = ஆயிரத்தளி,
பன்னிரு படலங் கூடினது = பன்னிரு படலம்
என்பன ஒரு மொழியொப்புத் துவிகுத் தொகை. அன்மொழியொப்புத் துவிகுத் தொகையெனினும் இழுக்காது.
மூவர் கோக்கள் = முக்கோக்கள்
என்பது பன்மொழியொப்புத் துவிகுத் தொகை.
(3)
47. வெகுவிரீகி சமாசம்
இருமொழி பன்மொழி பின்மொழி யெண்ணோ டிருமொழியெண்
மருவும் விதியா ரிலக்கண மற்றைச் சகமுன்மொழி
பரவுந் திகந்தரா ளத்தொகை யென்னப் பலநெற்றொகை
விரியுமொ ரேழவை வேற்று மொழிப்பொருண் மெல்லியலே !
(இ-ள்.) 1இருமொழித் தொகையும், பன்மொழித் தொகையும், பின்மொழி எண் தொகையும், இருமொழி எண்தொகை,
1. "இருமொழித் தொகையாவது, இரண்டிரண்டு மொழியால் தொகுவது; பன்மொழித் தொகையாவது, இரண்டின் மேற் கூறப்பட்ட மொழியால் தொகுவது." இவை வேறு பிரதியில் உள்ளவை.