தேசங்களிலே தேசங்களிலே பற்றிக்கொடு பற்றிக்கொடு நிகழ்கின்ற யாதொரு பூசல் 'தேசாதேசி' எனவும், தண்டுகளாலே தண்டுகளாலே அடித்து நிகழ்கின்றதோர் பூசல் 'தண்டாதண்டி' எனவும் வருவன, தடுமாற்றத்தை இலக்கணமாக உடைமையின், விதியாரிலக்கணத் தொகை; இது வடமொழியில் அல்லது வாராதெனக் கொள்க.
சகமுன்மொழித் தொகையாவது, வடமொழியில் முப்பத்திரண்டாம் வியஞ்சனத்தையும், முப்பத்து மூன்றாம் வியஞ்சனத்தையும் உடைய சொல் முன்னாகப் பெற்று, ஒரு 1மெய்ச் சொல் பின்னாகத் தொகுவதாம்; அது தொகுமிடத்து முன்னின்ற மொழியில் இரண்டாம் எழுத்து அழிந்தல்லது தொகாது.
வரலாறு:- முப்பத்திரண்டாம் வியஞ்சனத்தையும் முப்பத்து மூன்றாம் வியஞ்சனத்தையும் உடைய சொல்லை முன்னே நிறுவி, நீதி என்னுஞ் சொல்லைப் பின்னே நிறுவி, நீதியோடுங் கூடி நிகழாநின்றான் யாவன், அவன் 'சநீதி' ஆம் என்க.
திகந்தராளத் தொகையாமாறு:- தென்திசைக்குங் கீழ்த்திசைக்கும் நடுவு யாதொரு திசை, அது தென்கிழக்காம்; இவ்வண்ணம் தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு எனக் கண்டுகொள்க.
48. கன்மதாரய சமாசம்
முன்மொழிப் பண்பு மிருமொழிப் பண்பு மொழிந்தமைந்த
பின்மொழி யொப்பொடு முன்மொழி யொப்பும் பிணக்கொன்றிலா
முன்மொழி நற்கருத் தும்முன் மொழிநற் றுணிவுமென
நன்மொழி யார்கன்ம தாரய மாறென்ன நாட்டினரே.
(இ-ள்.) முன்மொழிப் பண்புத் தொகையும், பின்மொழிப் பண்புத் தொகையும், பின்மொழியொப்புத் தொகையும், முன்மொழியொப்புத் தொகையும், முன்மொழிக் கருத்துத் தொகையும், முன்மொழித் துணிவுத் தொகையும் எனக் கன்மதாரயம் ஆறாம் (எ-று.)
வரலாறு:-
நீலமும் அதுவே குவளையும் அதுவே என நீலக் குவளையாம். கருமையும் அதுவே பாம்பும் அதுவே எனக் கரும்பாம்பாம். இவ்வண்
1 'சாசுவன் என உயிர் பின்னாகவும் வருதலால் இது நியதியன்று,' என்பது பழைய குறிப்பு.