56

50. தமிழ்த்தொகை நிலைத்தொடர்களும், பண்புத் தொகை உம்மைத் தொகைகளின் வகையும்

வேற்றுமை யும்மை வினைபண் புவமையொ டன்மொழியென்(று)
ஆற்றுந் தொகைசெந் தமிணர்க ளாறென்பர்; ஆய்ந்தபண்பில்
தோற்று மளவு வடிவு நிறஞ்சுவை சொல்பிறவும்
ஏற்று மிருபல் லளவு நிறையெண் பெயரும்மையே.

(இ-ள்.) வேற்றுமைத் தொகையும், உம்மைத் தொகையும், வினைத்தொகையும், பண்புத் தொகையும், உவமைத் தொகையும், அன்மொழித் தொகையும் எனத் தொகை ஆறு வகைப்படுத்துச் சொல்லுவர் ஒருசார் தமிழ்ப் புலவர்; அவையாறினும் பண்புத் தொகை தொகுமிடத்து அளவுப் பண்புத் தொகையும், வடிவுப் பண்புத் தொகையும், நிறப் பண்புத் தொகையும், சுவைப் பண்புத் தொகையும், பிறவாற்றானுமாய்த் தொகும்; உம்மைத் தொகை தொகுமிடத்து இருபெயர்த் தொகையும், பலபெயர்த் தொகையும், அளவுப் பெயர்த் தொகையும், நிறைப் பெயர்த் தொகையும், எண்ணின் பெயர்த் தொகையும், எண்ணியற்பெயர்த் தொகையுமாய்த் தொகும்(எ-று.)

'எண் எனுஞ்சொல்லை இருகாலாகச் சொல்ல வேண்டியதேன்?" எனில், எண்ணியற்பெயரென்று எண்ணின்கண் நின்ற பெயரைக் குறித்தது ஒன்றும், எண்ணின் பெயரென்று எண்ணையே குறித்தது ஒன்றுமாக இரண்டாதலின் என்க.

வரலாறு:-

சாத்தனுடைய மகன், சாத்தன் மகன்; தாயொடு நால்வர், தாய் நால்வர் என வேற்றுமையழிந்து தொக்கவாறு.

பண்ணும் கோணிகையும், பண் கோணிகை என உம்மைத் தொகை வந்தவாறு; இவ்வண்ணம் செம்பு தரா, பயறு துவரை என உம்மை அழிந்து இருபெயர்த் தொகை வந்தவாறு.

எண்ணெய் மஞ்சள் வெற்றிலை, கடு நெல்லி தான்றி, சுக்கு மிளகு திப்பிலி எனப் பலபெயர்த் தொகை வந்தவாறு.

தூணியும் பதக்கும், தூணிப் பதக்கு என அளவுப் பெயர்த் தொகை வந்தவாறு; நடுவு ஏகாரமாகிக் கலனே தூணி எனவும் அமையும்.

கழஞ்சே கால், ஒன்றே காற்பலம் என நிறைப் பெயர்த் தொகை வந்தவாறு.

பத்தும் மூன்றும் பதின் மூன்று, ஆயிரமும் எட்டும் ஆயிரத்தெட்டு என எண்ணின் பெயர்த்தொகை வந்தவாறு; முப்பதின்மரும் மூவரும்