79

நிற்பீர் எனவும் வரும். இனி இவை முப்பத்தாறு கிரியா பதங்களுக்கும் ஒன்றுக்கு இரண்டாக எழுபத்திரண்டு பிரத்தியம் சொல்கின்றான்.

(2)

73. படர்க்கை இறந்தகால வினைகளில் பிரத்தியங்கள் வருமாறு

தானானுந் தாளாளுந் தாராருந் தார்களொ டார்களென்று
மேனா முரைத்த பிரத்திய மாகுந் ததுவதுவும்
தேனார் குழலி ! தனவு மனவுந் திகழ்படர்க்கை
ஆனா விறப்பில் தொழிற்பத மாறிற்கு மாய்ந்தறியே.

(இ-ள்.) தான், ஆன், தாள், ஆள், தார், ஆர், தார்கள், ஆர்கள், தது, அது, தன, அன என்று சொல்லப்பட்ட இவை பன்னிரண்டு பிரத்தியமும் இறந்தகாலப் படர்க்கைக் கிரியாபதம் ஆறிற்கும் ஒன்றிற்கு இரண்டாக வரும் (எ-று.)

வரலாறு :-

உண்டான், உண்டாள், உண்டார், உண்டார்கள், உண்டது, உண்டன எனவும்; உறங்கினான், உறங்கினாள், உறங்கினார், உறங்கினார்கள், உறங்கியது, உறங்கியன எனவும் வரும்.

அது என்பதற்கு இற்று என்பது ஆதேசமாய் உறங்கிற்று எனவும் வரும். அன என்பதின் முன்னின்ற அகாரத்தினுக்குப் பெருகவும் இகரம் ஆதேசமாய் உறங்கின என முடியும். பிறவும் விகாரத்தால் அறிந்து முடிக்க. பிறவுமன்ன.

(3)

74. படர்க்கை நிகழ்கால வினைகளில் பிரத்தியங்கள் வருமாறு

நின்றான் கிறானொடு நின்றாள் கிறாளிவை நின்றார்கிறார்
நின்றார்க ளோடுகின் றார்களு நின்றதுங் கின்றதுவும்
தென்றாத சீர்நின் றனகின் றனவுந் திகழ்படர்க்கைப்
பின்றா னிகழ்கை தொழிற்பத மாறிற்கும் பேர்த்தறியே.

(இ-ள்.) நின்றான், கிறான், நின்றாள், கிறாள், நின்றார், கிறார், நின்றார்கள், கிறார்கள், நின்றது, கின்றது, நின்றன, கின்றன என்னும் இப்பன்னிரண்டு பிரத்தியமும் நிகழ்காலப் படர்க்கைக் கிரியா பதமாறிற்கும் முறையே ஒன்றிற்கு இரண்டாக வைத்தறிக (எ-று.)

நில்லென்னுந் தாதுவினின்று இறந்த காலப் படர்க்கையில் நின்றான் முதலிய பிரத்தியங்கள் முடிந்தாங்குக் கிட, இரு என்னுந் தாதுக்களினின்றுங் கிடந்தான், இருந்தான் முதலாய பிரத்தியங்கள் நிகழ்காலப் பொருளில் வரும்; இஃது 'ஒன்றின