94

ஏந்திழை யெடுப்பலு மிடப்புறத் தகற்றலும்
பூந்தண் சிலம்பன் புணர்ச்சியது குறியுஞ்
செவிலியது சேறலுஞ் சென்றெதிர் கோடலும்
கவ்வை பெரிதிவட் கண்டறி யென்றலும்
அம்பலு மலரு மாயின வென்றலும்
வம்பலர் கோதை வாட்டங் கூறலும்
நற்றாய் செவிலி யென்றிவர் நன்னுதற்
குற்றதை யறியாது நற்றிறம் படர்தலும்
கட்டுரை கூட்டலுங் கேட்டவள் கூற்றும்
ஒட்டிவெறி யயர்தலு மொண்ணுத லழுங்கலும்
இவ்விய லன்னைக் குணர்த்துக வென்றலும்
அவ்விய லொட்டாண் மொழிதலு மாயிடைப்
பூத்தரு புணர்ச்சியும் புனல்தரு புணர்ச்சியும்
காப்பெரும் புனத்துக் களிறுதரு புணர்ச்சியும்
தாய்தரு புணர்ச்சியும்
கூறிய தாயது குறிப்புவழி மொழிதலும்
வரைந்துநனி புகுதலும் வரைவவர் மறுத்தலும்
கரைந்ததற் கிரங்கலுங் கவற்சி தீர்த்தலும்
எதிர்கொளல் மொழிதலு மேற்றுமகள் மொழிதலும்
நிரவிய வியற்கையோ டின்னவை பொருளே."

நெய்தல் நடையியல்

"கையறு புலம்புங் கலவியுந் தலைதரு
நெய்தல் நடையியல் நேருங் காலைக்
கடலுங் கழியுங் கைதையுங் கானலும்
மடலிரும் பெண்ணையும் வான்சிறைப் புள்ளும்
கழுமிய விருளும் கதிரொளி மதியும்
பொழுதுங் காற்று மென்றிவை முதலாம்
எவ்வகைப் பொருளு மிரந்துகுறை யுறுதலும்
அவ்வகைப் பொருளுக் காற்றா துரைத்தலும்
விரைமலர்த் தாரோன் விழுப்பங் கூறலும்
இரவுக்குறி நேர்தலும் பகற்குறி மறுத்தலும்
இரவிடங் காட்டலும் பகலிடங் காட்டலும்
வரவறி வுறுத்தலும் வான்துயில் கோடலும்
இறைவளைத் தோளியை யின்துயி லெடுப்பலும்
துறைவனின் துயிலெழீஇத் துன்னுதற் பொருட்டால்
ஏதில் கூறலு மிடத்துய்த் தகற்றலும்