96

இருங்கிளை மருங்கின் தூது விடுத்தலும்
ஒருங்க வருந்தலு முவந்துடன் சென்றலும்
மாதரைக் கொண்டுதம் வாழ்பதி புகுதலும்
ஓதிய வனைத்து முரியவை புக்கபின்
பொருள்வயிற் பிரிதலு மப்பிரி வுணர்த்தலும்
இருள்புரி கூந்த லிற்றென மொழிதலும்
ஆற்றா னாதலு மதுகேட்டு மொழிதலும்
கூற்றங் கோளிய வுலகிய லுரைத்தலும்
பின்னைப் பிரிதலும் பெருஞ்சுரத் தழுங்கலும்
நனிபகர் பள்ளியின் நயந்துசெல வழுங்கலும்
பரத்தையிற் பிரிவொழித் தெல்லாப் பிரிவும்
உரைக்குங் காலை யுணர்ந்தன னோக்கே."

மருத நடையியல்

"கருதற் கமைந்த கற்றோர் பூண்ட
மருத நடையது மாண்புறக் கூறின்
விழவு விரும்புதல்
பொழில்மகிழ்ந் திருத்தல் புனலாட் டயர்தல்
இல்லிடைப் பரத்தைய ரியலிடைப் பரத்தையர்
கல்வியொடு பழகிய காதற் பரத்தையர்
நல்லியல் நிலைமை நயப்புப் பரத்தையர்
சொல்லிய பரத்தையர் நால்வருங் கூற
ஆங்கவர்ப் புணர்த லவர்க்கண் ணகறல்
வீங்குமுலைப் பரத்தைய ருழைநின்று விடர்க்குப்
பாங்கன் தோழி பாண னென்னும்
ஆங்கவர் முதலிய ரிரந்துகுறை யுறுதல்
அவர்சென் றிரக்க வணியிழை மறுத்தல்
புகரறு கோதை பொறுத்தற் குறையிரத்தல்
ஊரன் புகுத லுவந்தெதிர் கோடல்
பேராச் சீற்றமொடு பெருமுனிவு பேசல்
விருந்தொடு புகுதல் புதல்வரொடு புகுதல்
திருந்திழை யரிவையைத் திரிந்தெதிர் கோடல்
சென்னிறக் கோலச் சிறுமி புகுதல்
அன்னிற நன்னா ளருங்கவி னுறைதல்
உண்ணிறை யுவகையோ டொண்ணுத லுவற்றல்
வெண்ணிறக் கோலத்து மேதக வுணர்தல்
பண்ணமைக் கிளவியொடு பள்ளியுள் மகிழ்தல்