அலைபுன லூர னாற்றான் புகுதல்
புலவிகற் பொன்றால் நண்ணிச் சீறல்
ஆற்றா னாகி யவளெதி ரூடல்
தேற்றே னென்ற தொழித்துவழி படுதல்
வளவய லூரன் வதுவை கேட்டுளை
உளநனி யடக்கி யுவந்தோள் போறல்
பண்ணி விடுதல் பான்மையின் மொழிதல்
எண்ணிய சிறப்பி னெங்கையென் றிசைத்தல்
மனைச்செல் பரத்தையை மகிழ்ந்தெதிர் கோடல்
முனித்தக வின்மை முயன்றுபண் பெய்தல்
ஆயிடை யவர்க ளமர்ந்தெதிர் கோடல்
போயஃ தீண்டல் புகழ்த லேத்தல்
பள்ளியுள் மகிழ்தல் பாங்குறப் புணர்தல்
எள்ளருந் தோழி யேற்பக் கூறலெனச்
சொன்னவை போல வன்னவு மெல்லாம்
பன்னுங் காலை யவ்வயிற் படுமே."
முல்லை நடையியல்
"இறைச்சிப் பெருமையோ டிறைவழிப் பட்டுக்
கற்புக்கடம் பூண்டு கடப்பா டாற்றும்
முல்லைத் திணைநடை சொல்லுங் காலை
இறைவன் பிரிய வில்லிருந் தாற்றி
நினைவுநனி காத்தல் நீர்மையின் மொழிதல்
மாழையங் கண்ணி வருந்தினள் பெரிதெனத்
தோழி கவறல் கவன்ற தோழிக்
காற்றுவ னென்ற லவன்பய முரைத்தல்
வேற்றுமை கூறல் வெய்துயிர்த் திரங்கல்
மின்மலி கார்கண்டு மெலிந்தவள் மொழிதல்
தொன்மலி தோழி கால மறுத்தல்
காதல் பெயர்பு காரன் றிருவெனத்
தாதவிழ் கோதை தானே கூறல்
பருவங் காட்டிப் பிரிவொழி யென்றல்
வருவர் நமரென வாய்மொழி வலித்தல்
அந்தியு மாம்பலு மாலையு மணியுந்
தென்றலுந் திங்களும் பிறவு மன்னவை
பகன்றற வாற்றா ளகன்றவண் மொழிதல்
என்குறை யிதுவென விரந்துகுறை கூறல்