100

என்பதனால் உட்பெறு பொருளை அறிவது.

இனிச் சொற்பொருளாவது,

"சொற்பொருண் மேதகச் சொல்லுங் காலைத்
தனிச்சொ லெல்லாந் தம்பொருள் விளக்கலும்
புணர்ச்சொற் புணர்ந்து தம்பொருள் விளக்கலும்
முதன்மொழி விளக்கலும் கடைமொழி விளக்கலும்
எனமொழி பொருளை விளக்குத லியல்பே."

இதனாற் சொற்பொருளறிக.

எச்சமாவது, ஒழிந்தது. அது வினையெச்சம், பெயரெச்சம் என்று இருவகைப்படும். வினையெச்சமாவது, வினையொழிந்து நிற்பது; பெயரெச்சமாவது, பெயரொழிந்து நிற்பது.

இனி,

"இறைச்சிப் பொருள்வகை திறப்படத் தெரியில்
அங்கியற் பொருளே திணைநிலைப் பொருளே
வன்புலப் பொதுப்பொருள் மென்புலப் பொதுப்பொருள்
பெருமைப் பொதுப்பொருள் விருந்துப்பொதுப் பொருளென
இருமூன் றென்பர் தெரிநூற் புலவர்."

அவற்றுள், அங்கியற் பொருளாவது, அந்நிலத்தில் அங்கமாம் பொருளெனக் கொள்க. அவையாவன: குறிஞ்சி நிலத்துச் சந்தனமும், பொன்னும், வெள்ளியும் முதலிய. நெய்தல் நிலத்து உப்பும், இப்பியும், நந்தும், அலவனும், வலையும் முதலிய. பாலை நிலத்துச் சீழ்கு நாய் குருவியும், சிள்வீடும், அறுபுள்ளியும், கொம்பியும் முதலாயுள்ளன. மருத நிலத்துக்குக் கரும்பு, வாழை, தெங்கு முதலாயுள்ளன. முல்லை நிலத்துக்குப் பூவையும், பூனையும், தும்பியும், காவளையும், கார்போகியும் முதலாயுள்ளன.

திணைநிலைப் பொருள் முன்பே சொல்லப்பட்டன.

இனி வன்புலப் பொதுப்பொருளும், மென்புலப் பொதுப்பொருளும், பெருமைப் பொதுப்பொருளும், விருந்துப் பொதுப்பொருளும்

ஆமாறு:-

"ஆரே புன்கை யரசு கிளிஞ்சில்
காரை பருத்தி கரும்பே முதலா
வன்புலப் பொருளென நன்குரைத் தனரே;
கீரை வழுதுணை கிடையே சணப்பே