101

வேரிதணக் கந்த மருத முதலான
மென்புலப் பொருளென நன்குரைத் தனரே;
தாளியும் பூவலு நாவலுங் கழஞ்சும்
வேலியு மாறும் பதடியுங் கோரையுஞ்
சூரையுஞ் சுரையுஞ் சுரும்பும் வண்டுந்
துவரையு மத்தியு மைம்பெரு முதிரையுங்
காணுங் காலைத் திணைதொறுங் காணப்
பேணின ரென்மனார் பெருமைப் பொதுப்பொருளே;
ஒருதிணைக் குரியன வொருதிணைச் சேரின்
விரிநூற் புலவர் விருந்தென் றனரே."

இனிப் பயனாவது,

"பயனெனப் படுவது நயனுறக் கிளப்பின்
வழிபா டன்பே வாய்மை வரைவே
பிழையா நிலைமை பெருமை தலைமை
பொறையே போக்கே புணர்வே முயக்கே
நிறையே யெச்ச நேச நீர்மை
ஐய மகற லார்வங் குணமே
பையப் பகர்தல் பண்பே சீற்றங்
காப்பே வெறியே கட்டு நேர்தல்
பூப்பே புலப்பே புறையே புறைவியெனப்
பாற்பட வின்னவை பயத்த லாகும்."

இனிக் குறிப்பாவது,

"பெண்டீ ராயினு மைந்த ராயினும்
உண்ட வேட்கை யுள்ளது கருதிக்
கொண்டுநனி செய்வது குறிப்பெனப் படுமே.
அதுவே,
உற்றவ னொழுக்கமு முறாச்சிறு நோக்கமும்
பற்றியுரை யாடலும் பாங்கிற் கேட்டலும்
ஊடலு முணர்தலு முவத்தலும் பரிதலும்
பாடலும் பரவலும் பணிதலும் பணித்தலும்
அணங்குகொண் டகைத்தலும் அழுங்குற் றுணர்த்தலுங்
குணம்புகழ்ந் துரைத்தலுங் குற்றங் கூறலுஞ்
செய்தது பொறுத்தலுஞ் செய்வாய் திருத்தலும்
வைத்து மகிழ்தலும் வாட்டங் காண்டலும்
அணிந்தன களைஇ யாடைபெயர்த் துடுத்தலும்
நாணலு நகுதலு நயத்தலும் பார்த்தலுங்