105

இனி, உவமையாவது,

"உவமமெனப் படுவ தவமற விரிப்பிற்
புகழே பழியே நன்மையென் றின்ன
நிகழு மொப்புமை நேர்ந்தன முறையே.

அவைதாம்,
கண்ணே செவியே மூக்கே நாவே
மெய்யே மனமே விளம்பின ஆறினும்
ஐய மின்றி யறுமூன் றாமே.

அவற்றுள்,
வடிவே வண்ண மொழிதன் மையென
நொடிவ கண்ணின் நோக்கிய வொப்பே.
எழுத்தியல் ஒலியும் எழுத்தில் ஒலியுமென
விழுத்தகு செவியின் வேண்டொப் பிரண்டே.
இனிய நாற்றமும் இன்னா நாற்றமும்
துன்னிய மூக்கினில் தோற்றும் பண்பே.
அறுவகைச் சுவையி னாவின் ஒப்பே.
நடுவு நிலைமை தண்மை வெம்மை
அறிவு நிலைமை பன்மை விழுப்பம்
நொப்பமு மழுக்குச் செருச்செருப் பென்றிவ்
வொன்பதும்
ஒழிவரும் பெருமை யுடம்பின் ஒப்பே.
வினையும் பயனுங் குலனுங் குணனும்
அளவு நிறமு மெண்ணோ டெழுவகை
பொறியி னாட்சியி னாடலின்
எய்திய வகையறிந் திசைப்ப தியல்பே.
மொழிந்த வேழு முதலுஞ் சினையும்
பண்பொடு பத்து மைவகை சேர்த்திக்
கொண்டே கூறினர் குறிப்புணர்ந் தோரே.
இல்பொருள் கேள்வி துணிவே யுவமஞ்
சொல்லிய நன்மையிற் சொல்லுந் துணிந்தோர்
கருதப் படுவகை தெரிந்துநனி வேறாமை
பொருளு முறுப்பு முதலாக் கூறினும்
ஏற்புழி நோக்கிய வெச்ச மாக
வாய்ப்பக் காட்டுக நூற்பொருள் வழக்கே.

அவைதாம்,
பாட்டின் பொருளொடு கூட்டித் தோன்றியும்