107

எல்லாப் பொருட்கு மெல்லா வியல்புஞ்
சொல்லா ருவமை யொருபுடைச் சொல்வர்
உவமைக் குவமை வழுவென மொழிப.
நற்பொரு ளுவமை தலைமைக் கேற்ப
திப்பொரு ணிற்கும் பகைமைக்குந் திகழ்ந்தே
அவற்றுள்,
ஈங்குத் தோன்றின வொப்புமை யிதுவெனப்
பாங்கறிந் துரைப்பது பண்பெனப் படுமே."

இனி இலக்கணமாவது, சட்டக முதலா உள்ளனவற்றுக் கெல்லாம் இலக்கணஞ் சொல்லிக் காட்டுதல்.

இனிப் புடையுரையாவது,

"புடையுரை யென்பது நடைவகை தெரியின்
திறந்தெரி பாட்டி னிற்பொரு ளன்றியும்
புறம்பெற வரூஉம் பொருள்வகை யுடைத்தே."

இனி மொழிசேர் தன்மையாவது, வேற்றுமைத் தொகையும், வினைத் தொகையும், பண்புத் தொகையும், உவமைத் தொகையும், அன்மொழித் தொகையு முதலாய்க் கிடந்த பிறவாற்றானும் அறிக.

இனிப் பொருணடையாவது,

"அளைமறி கோடலு மொழிமாற்றுக் கோடலுங்
கொண்டு கூட்டு மிருநிர னிறையுஞ்
சுண்ணங் கோடலு முதலா யினவே.
அவைதாந் தலைமையு மின்மையுங் கூட்டிப்
பின்னருங் காரணம் பற்றிய
பொருட்டாத் தோன்றும் பொருள்வகை யுடைத்தே."

இனி அகப்புறமும், புறமும், புறப்புறமும் ஆமாறு உணர்த்துகின்றான்:

(7-11)

97. அகப்புறம்

ஏற்று முதுபாலை பாசறை முல்லை யியன்றவள்ளி
தோற்றுஞ் சுரநடை யில்லவண் முல்லைதொல் காந்தளன்றி
மாற்றுங் குறுங்கலி தாபதங் குற்றிசை கைக்கிளையோ(டு)
ஆற்றும் பெருந்திணை யாந்தபு தார மகப்புறமே.

(இ-ள்.) இதனால் அகப்புறமறிக (எ-று.)

"ஆய்ந்த வகப்புற மையிரண்டு மாயுங்கால்
காந்தள் கவிமடமா வேறுதல்; காமமிக்