111

வென்றார் விளக்கமாவது,

"நாழிகையிற் காற்கூறு தாழாது ஞாயிறுபோய்
வீழ விதியுடைய வேல்வேந்தே--யேழிசையோ
டேகாயோ பைய வயிற்றைக் குளையாகிப்
போகாயோ வென்றான் புகன்று."

என வருவது.

நிரவும் வழிகையாவது, நாட்டக நாடு.

சோற்று நிலையாவது, மேற்செல்லப்படுவான் படையாளர்க்குப் பெறுமுறைமையால் உணா மிகுத்தல்.

கொற்றவர் மெலிவாவது,

"யானைதேர் பாய்மா வெனவேந்த ருள்ளீட்டீர்
சேனை யுடையீர் சிலரல்லீர் -"

என வரும்.

பரவு தழிஞ்சியாவது, உடைந்த படைஞர்பின் செல்லாமை.

(16)

102. காஞ்சியின் வகை

நிலையாமை வாழ்த்து மயக்க முதுமை நிலையினொடுந்
தொலையா மகிழ்ச்சி பெருமைதீப் பாய்தல் சுரத்திடைத்தன்
தலையார் கணவன் தனையிழத் தல்தனி யேயிரங்கல்
கலையார் மனைவிபெய் சூளுற வென்றிவை காஞ்சியென்னே.

(இ-ள்.) இவை காஞ்சி விகற்பமாம் (எ-று.)

நிலையாமையாவது, அறம், பொருள், இன்பம், இளமை, யாக்கை, உயிராதி நிலையாமை.

வாழ்த்தாவது, கடவுள் வாழ்த்து முதலாயின.

மயக்கம், என்பது பூசல் மயக்கம்; அது புகழுடையன செய்து துஞ்சிய பெருமக்களைச் சுற்றத்தார் புலம்புதல்.

முதுமையாவது, தவத்தின்கண் நின்றார்க்கு எடுத்துக் காட்டிய உவமைச் சொல்.

1"அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்
கிவ்வுலக மில்லா தியாங்கு."

என வரும்.


1 . திருக்குறள், 147.