114

ஓதல், வேட்டல், கொடுத்தல், படைக்கலத்தின் வாழ்தல், பல்லுயிரோம்பல் என்னும் அரசர் ஐந்தொழிலும்; ஓதல், வேட்டல், கொடுத்தல், உழுதல், பசுக் காத்தல், வாணிபம் என்னும் வைசியர் அறுதொழிலும்; கொடுத்தல், உழுதல், பசுக் காத்தல், வாணிகஞ் சிறப்பித்தல், நரம்புக் கருவி முதலாய கருவி கற்றல், அந்தணர் வழி ஒழுகல் என்னும் வேளாளர் அறுதொழிலுமாம்,

முக்காலமாவது, மூன்று காலம்.

களவழி, களத்திலழிவு.

குரவையாவது, இன்றேர்க்குரவையிட்டாடுதல்.

ஆற்றலாவது, ஆரியரணாத் தன் பகை மிகையை மதியாது பொரும் ஆற்றல்.

வல்லாண் பக்கமாவது, பகை வென்று விளங்கி மதிப்பெருவாகை வண்டாரத்துப் பெறுவான் செங்களத்துப் புலர்ந்து மாய்தல்.

வேட்கையார் பக்கமாவது, விருந்தோம்பலும் அழலோம்பலும் உட்பட எண்வகைத்தாம் பக்கம்.

மேன்மையாவது, பெரும்பகை தாங்கு மேன்மை; அது அருளொடு புணர்ந்த அகற்சியாம்.

"புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாது
முலைமறாஅக் குழவி வாங்கி வாய்ப்படுத்
திரையெனக் கவர்ந்தது நோக்கி யாங்க
வேரிளங் குழவின் சென்று காண
கூருகிர் வயமான் புலவுவேட்டுத் துடங்கிய
வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப்
பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
யாருயிர் காவல் பூண்ட
பேரருட் புணர்ச்சிப் பெருமை தானே."

பொருளாவது, அறம், பொருள், இன்பம் மூன்று பொருளினும் விடாமற் புணர்ப்பது.

காவலாவது, பிழைத்தோரைத் தாங்குதல்.

துறவாவது, தவத்தினை வென்ற பக்கம். அஃதாவது,

"வாடாப் போதி மரகதப் பாசடை
மரனிழ லமர்ந்தோ னெஞ்சம் யாவர்க்கும்