118

"துறவு மடக்கமுந் தூய்மையுந் தவமும்
அறவினை யோம்பலு மறத்தினை மறுத்தலும்
மனையி னீங்கிய முனைவர்த மறமே."

என்பதனால் இவ்விரண்டும் அறிக.

"அறுவகைத் தொழிலினு மைந்துவகைப் பொருளினும்
உறுபுகழ் மன்னவ ருறவொடு நிலவ
மறுகில் வாட்கை வாட்சி யாகும்."

என்றமையால், வாட்கையறிக.

அறுவகைத் தொழிலும், வரைவு, வாணிகம், விச்சைச் சிறப்பு முதலியவெனக் கொள்க.

ஐவகைப் பண்டமாவன, நிலம், களம், காலேயம், மெய்ப்பொருள், மெய்ப்பண்டம் எனக் கொள்க.

ஒருதலைக் காமமாவது, ஆண்பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை என இரண்டு வகைப்படும்.

ஐந்திணைக்குப் புறனும் ஆனந்தமும் அறநிலைத் திணையுமாவது, பொதுவியற் படலம் எனக் கொள்க.

பரிபாடத்து மெய்வழிச்சியும், பரவலும், புகட்சியும், அன்புறுத்தலும், புகழ்வித்தலும், புனைதலும், அவாவின்நிலையும், தெய்வவாழ்த்தும், பூவை வாழ்த்தும், பரிசில் நிலையும், இயன்மொழியும், கண்படை நிலையும், கலவி நிலையும், வெள்ளி நிலையும், நாடுபுகழ் நிலையும், களவழி நிலையும், பெருமங்கலமும், மணமங்கலமும், பொலிவு மங்கலமும், பரிசில் கடா நிலையும், ஆள்வினை வேள்வியும், வாயுறையும், செவியறிவும், குடை மங்கலமும், நாள் மங்கலமும், ஓம்படையும், புறநிலையும், ஆற்றுப்படையும் பாடாண்துறை எனக்கொள்க.

நயநிலைப் படலமாவது, நாடகம்; கூத்தமார்க்க மென்பதுமது. அது பெரியோரைத் தலைமக்கள் மேவச் செய்யப்பட்ட மெய்ப்பொருள் பற்றி வருதல். சிறியோரைத் தலைமக்களாக்கி ஒளியும் விருத்தியும் சாதியும் சந்தியும் சுவையுமுதலாகப் பல விகற்பத்தானும் வரும்.

அவற்றுள் 1ஒளியாவது, சந்தி நிருதையும், அநிருதையும், சந்தியா நிருதையும் என மூன்று. அதுவே, உள்ளோன் தலைமகனாக உள்பொருளும், இகப்பொருளும், இலப்பொருளும், இரவுப்பொரு


1"ஒளியென்றது கதாப்பிரகாச வஸ்துவை. வடநூலார் அதனைப் பிரக்கியாதம், உற்பாத்தியம், மிசிரம் என வகுப்பர்," என்பது பழைய குறிப்பு.