119

ளும் என்றும், இல்லோன் தலைமகனாக உள்பொருளும், இகப்பொருளும், இலப்பொருளும், இரவுப்பொருளும் என்றும்; இல்லோன் தலைமகனாக இல்பொருள் என்றும் ஐந்து வகைப்படும்.

விருத்தியாவது, சாத்துவதியும், ஆரவடியும், 1கைசிகியும், பாரதியும் என நான்கு வகைப்படும்.

சாத்துவதியாவது, தலைமக்களில் அறப்பொருள் உபாங்கமாவது.

ஆரவடியாவது, அதிகெம்பீர சந்தர்ப்பமாய் நிப்பியாபாண்டவாவுரை சுவைத்தல் உபாங்கமாவது.

கைசிகியாவது, காம விகற்பம் உபாங்கமாவது.

பாரதியாவது, கவுத்தனையே தலையாகக் கூத்துக் கொடுக்கப்படுவது.

சாதியாவது,2வீரம், கூச்சம், அர்ப்பாயம், பேய்க்காரம், வியோகம், பாணம், சல்லாபம், வீழிணி, உத்தாரமடங்கம், பிராசனம் என இவை.

வீரமாவது, அங்கம் இரண்டு முதலா ஆறிரண்டும் எய்தப் பெற்றுச் சந்தியைந்தும் உடைத்தாய் வாரங் கண்டம் பெற்றும் பெறாதும் தலைமகன் ஒருவனாவது.

கூச்சமாவது, தலைவர் இருவரை இடையிட்டுப் பேசப்பட்டு வாரத்தோடிருக்கும்.

அரப்பாயமாவது, அருளில்லாதோர் தலைமக்களாய்ப் பெண்ணுடைத்தாய் வாரம் போலியாவது; அர்ப்பீடமெனினுமொக்கும்.

பேய்க்காரமாவது, தலைமக்கள் தேவ காந்தர்வ பைசாசாதி பதினறுவராய்ப் பெண்ணுடைத்தாய் முன்பின் மூன்றினும் ஒன்றின் பொருள் பெறுதலும் அங்கமொன்றாதலும் கண்டமொன்றாதலுமாம்.

வியோகமாவது, தலைமக்கள் ஒருவரைத்தான் பலரைத்தான் உடைத்தாய்ச் சந்தியைந்துமுடைத்தாய்த் தலைமைக்கண்டம் ஒரு கண்டம் பெறும்.


1 "கௌசிகை யென்றும் பாடமுண்டு."

2 "வடநூலார் நாடகம், பிரகரணம், பாணம், பிராசனம், இடிமம், வியோகம், சமவாகரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் என வகுத்துக் கூறுந் தசரூபமும் ஆசிரியர் கூறிய பதின்சாதியும் இலக்கணத்திற் சிறுபான்மை ஒத்தன. வடமொழி இலக்கணத்தைப் பிரதாப ருத்திரீயம், தசரூபகம், சாயித்திய தருப்பணம் முதலியவற்றில் விரிவாகக் காண்க," என்பன பழைய குறிப்பு.