121

அபூதாரணம், மார்க்கம், உருவம், உதாயிருதி, கிரமம், சங்கிரகம், அநுமானம், தோடகம், அதிபலம், உதேகம், சம்பிரமம், ஆகேவம் எனப் பன்னிரண்டும் கர்ப்ப முகத்தின் பேதம்.

அபவாதம், சம்பேடம், வித்திரவம், திரவம், சத்தி, துதி, பிரசங்கம், சலனம், விவசாயம், நிரோதனம், பிரரோசனம், விசலனம், ஆதானம் இவை பதின்மூன்றும் வைரி முகத்தின் அங்கங்கள்.

சந்தி, விரோதம், கிரதனம், நிண்ணயம், பரிபாடணம், பிரசாதம், ஆனந்தம், சமயம், கிருதி, ஆபாடணம், உபகூகனம், பிரசத்தி, பிரசனம், சங்காரம் இவை பதினான்கும் நிருவாண முகத்தின் அங்கங்கள்.

முகமாவது, உழுப்புப் புத்தீயினின்று முளைத்தாற்போலக் கூத்தின் முகத்தினுள்ளே பொருள் தோன்றுவது.

பயிர்முகமாவது, முளைத்த அங்குரம் ஓங்கி மூத்தாற்போலத் தலைமக்கள் சொன்ன பொருளைப் பொலியுமாற்றால் விரிவாற்சொல்வது.

கருப்பமாவது, கலத்திற் கருவு திரண்டோங்கிக் குடைப்போகியவாறு போல நலந்தரும் பொருளைத் திரளச் சொல்லுவது.

விமரிசமாவது, தோடு விரித்துக் கதிர் போந்தாற்போலவும், மேயது வளைத்தாற் போலவும் நாடகப்பொருள் நன்கு விளிக்கப் பயன்படுவது. விமரிசமெனினும் வைரிமுகம் எனினும் ஒக்கும்.

நிருவாணமாவது, விளைந்த போகம் விதி வரையால் அறுத்துப் படுத்து வைத்துத் துகளுங் களைந்துகொண்டு உண்மகிழ்ந்தாற் போலக் கொள்வது.

1 சுவையாவன, சிங்கார முதலாயுள்ளன என்றாம். அவையிற்றை வீரக் குறிப்பு, பயக் குறிப்பு, உக்கிரக் குறிப்பு, சிங்காரக் குறிப்பு, காருணியக் குறிப்பு, அற்புதக் குறிப்பு, புகழ்க் குறிப்பு, நகைக் குறிப்பு, இழிப்புக் குறிப்பு என்று ஒன்பதாகவுங் கூறுவர். வீரக் குறிப்பு, வெளி முதலாயினவாம். நகைக் குறிப்பு, மென்மை முதலாயினவாம்.

"களவுங் கற்புங் கைகோ ளாக
அளவி னன்பின தகமெனப் படுமே."


1 "வடநூலார் இவற்றினை நவரசம் எனக் கூறுவர்," என்பது பழைய குறிப்பு.