127

கொங்குநாறு போதுசிந்தி வானுளோ ரிறைஞ்சிடக்
     கோதிலா வறம்பகர்ந் தமர்ந்தகோன் குளிர்நிழற்
பொங்குதாது கொப்புளித்து வண்டுபாடு தேமலர்ப்
     போதியெம் பிரானடிக்கள் போற்றில் வீட தாகுமே.'

இது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.

'வீடுகொண்ட நல்லறம் பகர்ந்தமன் பதைக்கெலாம்

விளங்குதிங்க ணீர்மையால் விரிந்திலங்கும் வன்பினோன்

மோடுகொண்ட வெண்ணுரைக் கருங்கடற் செழுஞ்சுடர்

முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியி

னாடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான

வைந்தொடங்கொர் மூன்றறுத்த நாதனாண் மலர்த்துணர்ப்

பீடுகொண்ட வார்தளிர்ப் பிறங்குபோதி யானையெம்

பிரானைநாளு மேத்துவார் பிறப்பிறப்பி லார்களே.'

இது பதினொருசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள். இதின் மேற்பட்டனவெல்லாம் இரட்டை விருத்தம் என்க. 

(3)

110. மயங்கி வரும் மோனை எழுத்துக்கள்

முன்னிரண் டாவியு மீறுமை யும்மோனை; முன்னவற்றின்
பின்னிரண் டாவியு மேழுமெட் டும்மோனை; ஆறுமைந்தும்
பன்னிரண் டாமுயிர் முன்னிரண் டும்மோனை; பண்ணுந்தச்சப்
பின்னிரண் டாநஞ மவ்வும்வவ் வும்மோனை பெண்ணணங்கே!

(இ - ள்.) முன்படைய நின்ற அ ஆ என்னும் இரண்டுயிரும், ஒள என்னும் இறுதியுயிரும், ஐகாரவுயிரும் ஆக இந்நான்குயிரும் வந்து, தம்முள் ஒன்றுக்கொன்று மோனை எனப்படும்; முன்பு சொன்ன அ ஆவின் பின்பு நின்ற இ ஈ என்னும் இரண்டுயிரும், ஏழாமுயிரும், எட்டாமுயிரும் ஆகிய இந்நான்குயிருந் தம்முள் ஒன்றுக்கொன்று மோனை எனப்படும்; ஆறாமுயிரும், ஐந்தாமுயிரும், பன்னிரண்டாமுயிரின் முன்பு நின்ற இரண்டுயிரும் ஒன்றுக்கொன்று மோனை எனப்படும்; தகாரமும், சகாரமுந் தம்முள் மோனையாம்; ஞகாரமும், நகாரமுந் தம்முள் மோனையாம். மகரமும், வகரமுந் தம்முள் மோனையாம். (எ-.று.)

'இஃது இவ்விடத்துச் சொல்ல வேண்டியது என்னை?' எனின், இரு சீரான் வந்த குறளடியும், முச்சீரான் வந்த சிந்தடியும், நாற்சீரான் வந்த அளவடியும், ஐஞ்சீரான் வந்த நெடிலடியும், ஐஞ்சீரின் மிக்கு வந்த கழிநெடிலடியும் ஆமாறு சொல்லிய பாதங்