130

1'தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.'

இது வல்லின எதுகை.

2'அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு.'

இது மெல்லின எதுகை.

3'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.'

இஃது இடையின எதுகை.

4'மனைக்குப்பாழ் வாணுத லின்மைதான் சென்ற
திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை யிருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ்
நல்லறி வில்லா வுடம்பு.'

இஃது இரண்டாம் எழுத்தின்மேல் ஏறின உயிரெழுத்து ஒத்தும் ஒற்று ஒவ்வாதும் வந்த உயிரெதுகை.

'பேய்மை யாக்குமிப் பேதைமைக் கள்வனொ டுடனாய்க்
காமுற் றாமதன் பயத்தினிற் காமனைக் கடந்து
நாம ரூஉம்புகழ் கொடுப்பதோர் நன்னெறி நண்ணும்
வாமன் வாய்மொழி மறந்திட்டு மறந்தொழி கின்றாம்."

இது யகரவொற்று வந்த ஆசிடை எதுகை.

5'மாக்கொடி *மாணெயில் மவ்வற் பந்தருங்
கார்க்கொடி முல்லையுங் +கவினு மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் ++புறவ ஞாழலுந்
தூக்கொடி கமழ்ந்துதான் துறக்க மொக்குமே.'

இது ரகரவொற்றிடை வந்த ஆசிடை எதுகை.

6'ஆவே றுருவின வாயினு மாபயந்த
பால்வே றுருவின வல்லவாம் பால்போல்


1. திருக்குறள், 114. பி-ம்: * யானையு

2. திருக்குறள், 74. + கலந்து

3. திருக்குறள், 299. ++ கான

4. நான்மணிக் கடிகை, 20.

5. சூளா. நாட். 29.

6. நாலடியார், 117.