132

வெளி விருத்தம்; ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம்;கலித் தாழிசை, கலித்துறை, கலி விருத்தம்;வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் எனக் கூறுவர்.இவையிற்றினும் பலவாகச் சொல்லுவாருமுளர் எனக் கொள்க.அவை வருமாறு:-

(6)

113. வெண்பாவின் பொதுஇலக்கணம்

ஒன்று மிடைச்சீர் வருஞ்சீ ரொடு;முதற் சீர்கள்தெற்றும்;
என்று மளவடி யீற்றடி யல்லன;ஈற்றடியும்
நன்று மலர்காசு நாள்பிறப் பென்றிற்ற சிந்தடியே;
துன்றுங் கடைச்சீர் புகாவென்பர் வெள்ளையிற்றூமொழியே !

வெண்பாவினுக்குப் பொது இலக்கணங் கூறுகின்றான்.

(இ - ள்.) வெண்பா என்னுஞ் செய்யுளின்கண் இடைச்சீர் வருஞ்சீரோடு ஒன்றி வரும்;முதற்சீர் வருஞ்சீரோடு தெற்றிவரும்.ஈற்றடியல்லாத அடியெல்லாம் அளவடியாலே வரும்;ஈற்றடி மலர், காசு, நாள், பிறப்பு என்னும் நான்கு உதாரணத்தின் ஒன்று இறுதியாய் வந்த சிந்தடியாய் வரும்;கடைச்சீர் நான்கும் வெண்பாவிற் புகப்பெறா (எ-று.)

வரலாறு:-

'வேலை முகடும் விசும்பகடுங் கைகலந்த
காலைநீ யெங்கே கரந்ததுகொல்--மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலே பெண்பாகா வையா
விறைக்கீறா வெங்கட் கிது.'

'துன்றுங் கடைச்சீர்' என்னும் அதிக வசனத்தால் தேமா, புளிமா என்னும் இரண்டு முதற்சீரும் கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் இரண்டு கடைச்சீரும் ஒத்தாழிசைக் கலிப்பாவினுட் புகப்பெறா எனவும், ஆசிரியப் பாவினுள்ளுங் கருவிளங்கனி கூவிளங்கனி என்னும் இரண்டு கடைச்சீரும் புகப்பெறா எனவுங் கொள்க.இனி வெண்பாவைப் பலவாகக் கூறுபடுத்துவர்.அவையாமாறு:-

(7)

114. வெண்பாவின் வகை

வேண்டிய ஈரடி யாற்குறள் ஆம்;மிக்க மூவடியால்
தூண்டிய சிந்தியல்; நான்கடி நேரிசை; தொக்கதனின்
நீண்டிய பாதத்துப் பஃறொடை யாம்;இத னேரிசையே
நீண்டிசை யாங்கலி;நேரிசை பேதிக்கி லின்னிசையே.