133

(இ - ள்.) ஈரடியால் வருவது குறள் வெண்பாவாம்; மூவடியால் வருவது சிந்தியல் வெண்பாவாம்; நான்கடியால் வருவது நேரிசை வெண்பாவாம்; நான்கடியின் மிக்கு வருவது பஃறொடை வெண்பாவாம்; நேரிசை வெண்பாப் போன்று அதனின் நீண்டு வருவது கலி வெண்பாவாம்; நேரிசை வெண்பா விகற்பிக்க இன்னிசை வெண்பாவாம் (எ-று.)

விகற்பமாவது:-முதலடியிலே தனிச்சொற் பெற்று வேறொரு விகற்பமாய் வருவதுவும், இரண்டாமடி தனிச்சொற் பெற்று வேறொரு விகற்பமாய் வருவதுவும், மூன்றாமடி தனிச்சொற்பெற்று வேறொரு விகற்பமாய் வருவதுவும், தனிச்சொலின்றி நான்கடியும் பல விகற்பமாய் வருவதுவும், தனிச்சொல்லின்றி நான்கடியும் ஒரு விகற்பமாய் வருவதுவும் இன்னிசையாம்.

வரலாறு:-

1'சாதலி னின்னாத தில்லை யினிததூஉம்
ஈத லியையாக் கடை.'

இது குறள் வெண்பா.

2'அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.'

இது விகற்பக் குறள் வெண்பா.

3'நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே பொற்றேரான்
பாலைநல் வாயின் மகள்.'

இது நேரிசைச் சிந்தியல் வெண்பா.

4'நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரில்
அறநாட்டுப் பெண்டி ரடி.'

இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

'ஒன்றைந்தெட் டாகியசீ ரொத்த வெதுகையாய்
நின்றபதின் மூன்றொன்பா னேரொத்து-நன்றியலு


1. திருக்குறள், 230.

2. திருக்குறள், 401.

3. யாப்ப. வி. 59-ஆம் சூ. மேற்கோள்.

4. யாப்ப. வி. 59-ஆம் சூ. மேற்கோள்.