137

அவை வருமாறு:-

1'நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.'

இஃது ஈற்றயலடி முச்சீரான் வந்தமையான் நேரிசையாசிரியப்பா.

2'நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ்
சாரச் சார்ந்து
தீரத் தீருஞ்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே.'

இஃது இடையே சிந்துங் குறளும் வந்தமையால் இணைக்குறள் ஆசிரியப்பா.

'கொங்கை யிணையெழில் கோங்கரும் பாக
அங்கை யணியிதட் டாமரை யாக
மணிநிறக் கண்ணிணை குவளை யாக
எண்ணிய நுண்ணிடை வல்லி யாக
நண்ணிய முறுவல் முல்லை யாக
வீறுமச் செவ்வாய் கொவ்வை யாக
ஐயவிச் சீறடி தளிர்க ளாகச்
சிறியே மாகங் காய்ந்தவிம் மங்கை
தன்னைக் காத்துமென் றனக்கிரக்க மின்றி
ஓடரிக் கண்ணியை யொளித்தீ ராயினுங்
காட்டுமி னென்று கைதொழு திறைஞ்சினன்
வாட்டிறத் தடக்கை வத்தவர் கோவே.'

இஃதெல்லா அடியும் நாற்சீரான் வந்தமையான் நிலைமண்டில ஆசிரியப்பா எனக் கொள்க.

3'மாறாக் காதலர் மலைமறந் தனரே
ஆறாக் கண்ணீர் வரலா னாவே


1. குறுந்தொகை, 3.

2. யாப்ப - வி. 72-ஆம் சூ. மேற்கோள்.

3. யாப்ப - வி. 73-ஆம் சூ. மேற்கோள்.