139

116. கலிப்பாவின் வகை.

தரவொடு தாழிசை சுற்றும் அராகமம் போதரங்கம்
உரவுடை நற்றனி வாரமென் றாங்கலி; ஓர்ந்ததனை
வரவிசை நேரிசை யம்போ தரங்கம்பின் வண்ணகமே
விரவிய கொச்சகம் வெண்கலி யென்று விகற்பிப்பரே.

(இ - ள்.) தரவும், தாழிசையும், அராகமும், அம்போதரங்கமும், தனிச் சொல்லும், சுரிதகமும் என்னும் ஆறுறுப்பும் உடையது கலிப்பா எனக் கொள்க. இனி அதனை நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, வெண்கலிப்பா என விகற்பித்துக் கூறுவர்(எ-று.)

'அளவடியே முதலாக அனைத்தடியி னானும்

அழகமர்நான் கடிமுதலா எட்டடியி னளவும்

வளமலியுஞ் சீரராக வுறுப்புவந் தாகும்

மன்னியவீ ரடியிரண்டு மோரடியா னான்கும்

உளமலிசிந் தடியெட்டுங் குறளடி யீரெட்டும்

ஒருங்கியல்பே ரெண்சிற்றெண் ணிடையெண்ணோ டளவெண்

தளமலியம் போதரங்க மெனும்பெயரா னிலவுந்

தாழிசைக்கீ ரடிசிறுமை பெருமைநான் கடியே.'

இதனால் அராக உறுப்பிற்கும், அம்போதரங்க உறுப்பிற்கும், தாழிசைக்கும் இலக்கணம் அறிக. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கும், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கும் உறுப்பாகிய தரவு அளவடியால் வரும். பிற பாவின் தரவிற்கு அடி வரையறையில்லை.

'தாழிசை தரவிவை தாமள வடியே.'

என்றாராகலின், அவ்விரண்டும் அளவடியால் வருமென்க. 

(10)

117. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க ஒத்தாழிசைக் 
கலிப்பா நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாக்களில் வரும்
உறுப்பும் வெண்கலிப்பா ஆமாறும்

வண்ணக வொத்தா ழிசைக்கா றுறுப்பென்பர்; ஐந்துறுப்பு
நண்ணுவ தம்போ தரங்கவொத் தாழிசை; நான்குறுப்பாம்
எண்ணிய நேரிசை யொத்தா ழிசைதான்; இறுதிசிந்தாய்த்
திண்ணிய நேரடி யால்வரும் வெண்கலி தேமொழியே!