141

இவை ஈரடி இரண்டாய் வந்த பேரெண்.

கற்புடை மாரனைக் காய்சினந் தவிர்த்தனை;
பொற்புடை நாகர்தந் துயரம் போக்கினை;
மீனுரு வாகி மெய்ம்மையிற் படிந்தனை;
மானுரு வாகி வான்குண மியற்றினை;

இவை ஓரடி நான்காய் வந்த சிற்றெண்.

எண்ணிறந்த குணத்தோய் நீ; 
யாவர்க்கு மரியோய் நீ;
உண்ணிறைந்த வருளோய் நீ;
உயர்பார நிறைத்தோய் நீ;
மெய்ப்பொருளை யறிந்தோய் நீ;
மெய்யறமிங் களித்தோய் நீ;
செப்பரிய தவத்தோய் நீ;
சேர்வார்க்குச் சார்வு நீ;

இவை முச்சீரினால் வந்த இடையெண்.

நன்மை நீஇ;
தின்மை நீஇ;
நனவு நீஇ;
கனவு நீஇ;
வன்மை நீஇ;
மென்மை நீஇ;
மதியு நீஇ;
விதியு நீஇ;

இம்மை நீஇ;
மறுமை நீஇ;
இரவு நீஇ;
பகலு நீஇ;
செம்மை நீஇ;
கருமை நீஇ;
சேர்வு நீஇ;
சார்வு நீஇ;

இவை இருசீர் பதினாறாய் வந்த அளவெண்.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

அகலி லாநின் றடியிணை பரவுதும்
வெல்படைத் தொண்டிமான் விறற்சே னாபதி
சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு
பொங்குபுகழ் வில்லவன்றன் புறக்குடை கொண்டு
பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன்
மலிதரு பார்மிசை மன்னுவோ னெனவே.'

இது சுரிதகம்.

இஃது ஆறுறுப்பாலும் வந்தமையால் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.