145

இது சுரிதகம்.

இஃது ஆறடித் தரவும், நான்கடித் தாழிசையொத்த பொருண்மேல் மூன்றும் வந்து, அளவடி ஈரடியிரண்டும், ஓரடி நான்கும், சிந்தடி எட்டும், குறளடி பதினாறுமாய் அம்போதரங்கம் பெற்று ஆறடி ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா.

1'வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ;

இது தரவு.

சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவால்
பீருடைய நலந்தொலையப் பிரிவரோ பெரியவரே;

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பரோ நயமிலரே;

சிலம்படைந்த வெங்கானஞ் செறுத்தகைய வென்பவால்
புலம்படைந்து நலந்தொலையப் போவரோ பொருளிலரே;

இது தாழிசை.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

அருளெனு மிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலமும் வாழியர்
பொன்னெடுந் தேரொடுந் தானையிற் பொலிந்தே.'

இது சுரிதகம்.

தரவு மூன்றடியாய்த் தாழிசை மூன்றும் இரண்டடியாய்த் தனிச்சொற்பெற்று, மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. தரவு எனினும், எருத்தம் எனினும் ஒக்கும். தாழிசை எனினும், எண்ணெனினும், இடைநிலைப்பாட்டு எனினும், ஒக்கும் அராகம் எனினும், அடுக்கியல் எனினும், முடுகியல் எனினும், வண்ணகம் எனினும் ஒக்கும். அம்போதரங்கம் எனினும், அசையடி எனினும், பிரிந்திசைக்குறளடி எனினும், சொற்சீரடி எனினும், எண்ணெனினும் ஒக்கும். தனிச்சொல் எனினும், இடைநிலை எனினும் ஒக்கும். சுரிதகம் எனினும், அடக்கியல்


1. யாப்ப. வி. 82-ஆம் சூ. மேற்கோள்.