146

எனினும், வாரம் எனினும், வைப்பு எனினும், போக்கியல் எனினும் ஒக்கும்.

இனி வெண்கலிப்பா வருமாறு:-

1'ஏர்மலர் நறுங்கோதை யெருத்தலைப்ப விறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்துபவென்
தார்வரை யகன்மார்பன் தனிமையை யறியுங்கொல்
சீர்நிறை கொடியிடை சிறந்து.'

இஃது ஈற்றடி முச்சீராய் ஏனையடி நாற்சீராய் வந்தமையான், வெண்கலிப்பா.

(11)

118. கொச்சகக் கலிப்பாவின் வகை

நிலவுந் தரவுந் தரவிணை யும்நின்ற தாழிசைகள்
சிலவும் பலவுஞ் சிறந்து மயங்கியுஞ் சீர்விகற்பம்
பலவும் வரினும் பவளமுஞ் சேலும் பனிமுல்லையுங்
குலவுந் திருமுகத் தாய்!கொண்ட வான்பெயர் கொச்சகமே.

(இ - ள்.) தரவு ஒன்றாய் வருவது தரவு கொச்சகக் கலிப்பாவாம்; தரவு இரண்டாய் வருவது தரவிணைக் கொச்சகக் கலிப்பாவாம்; சில தாழிசையாய் வருவது சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவாம்; பல தாழிசையாய் வருவது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவாம்; ஆறுறுப்பும் தம்முள் மயங்கியும் மிக்கும் குறைந்தும் பிற பாக்களோடு விரவியும் வருவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாம் (எ-று.)

வரலாறு:-

2'செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியங்கொண்மூ விடைநுழையு மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.'

இது சுரிதகமில்லாத தரவு கொச்சகக் கலிப்பா.

3'குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப


1. யாப்ப. வி. 85-ஆம் சூ. மேற்கோள்.

2. யாப்ப. வி. 85-ஆம் சூ. மேற்கோள்.

3. யாப்ப. வி. 22-ஆம் சூ. மேற்கோள்.