151

காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய்
ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்;

இணைபிரிந்தார் மார்பன்றி யின்பக்கு மருந்துரையாய்
துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்;

இவையாறுந் தாழிசை.

பகைபோன் றதுதுறை;
பரிவா யினகுறி;
நகையிழந் ததுமுகம்;
நனிநா ணிற்றுளம்;
தகையிழந் ததுதோள்;
தலைசிறந் ததுதுயர்;
புகைபரந் ததுமெய்;
பொறையாயிற் றென்னுயிர்;

இவை இருசீர் எட்டு அம்போதரங்கம்.

எனவாங்கு,

தனிச்சொல்.

இனையது நிலையா லனையது பொழுதால்
இனையல் வாழி தோழி தொலையாப்
பனியொடு கழிக வுண்கண்
என்னொடுங் கழிகவித் துன்னிய நோயே.'

இது சுரிதகம்.

தரவு இரட்டித்துத் தாழிசையாறும், தனிச் சொல்லும் நான்கு ஈரடி அராகமும், பெயர்த்தும் ஆறு தாழிசையும், எட்டு அம்போதரங்க உறுப்பும், தனிச்சொல்லும், நான்கடிச் சுரிதகமும் பெற்றுக் கலிக்கோதப்பட்ட ஆறுறுப்பும் வந்து மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும் மயங்கியும் வந்தமையால், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. 

(12)

119. வஞ்சிப்பாவும் மருட்பாவும் ஆமாறு

சிந்துங் குறளு மடியென்பர் வஞ்சிக்குச் சீர்தனிச்சொல்
அந்தஞ் சுரிதக மாசிரி யத்தான் மருவும்;வெள்ளை
முந்தி யிறுதி யகவல தாகி முடியுமென்றால்
இந்து நுதன்மட வாய்!மருட் பாவென் றியம்புவரே.

(இ - ள்.) வஞ்சிப்பா இருசீர் அடியானும் முச்சீர் அடியானும் வரும்; இப்படி இருசீர் அடியானும் முச்சீர் அடியானும் வந்த